மாமனாரை முந்திக் கொண்ட மருமகன்.. யூடியூப் டிரெண்டிங்கில யார் பாட்டு முதல்ல வருதுன்னு பார்ப்போம்!

சென்னை: பட்டாஸ் படத்தில் இடம்பெற்றுள்ள 'மொரட்டு தமிழன் டா' பாடல் வீடியோவை நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக தர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் வீடியோ இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது என்ற அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டது.

அதுவரை சத்தமே காட்டாமல் இருந்த சத்ய ஜோதி நிறுவனம் சட்டென்று ஒரு அறிவிப்பை வெளியிட தற்போது தனுஷும் 'மொரட்டு தமிழன் டா' பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பொங்கல் ரேஸ்

பொங்கல் ரேஸ்

இந்த பொங்கலுக்கு தர்பார் படத்தின் வசூலுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய தடையாக இருந்தது தனுஷின் பட்டாஸ் படம் மட்டும் தான். பொங்கல் ரேஸில் தனுஷின் பட்டாஸ் படம் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் தர்பார் படம் பொங்கல் விடுமுறைக்கு கூடுதலாக வசூல் அள்ளியிருக்கும்.

பாலிவுட்டில் படுதோல்வி

பாலிவுட்டில் படுதோல்வி

பாலிவுட்டில் தர்பார் படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று திரைக்கதை, ஷூட்டிங், கதைக்களம் என வடமாநிலத்தை குறிவைத்தே இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் படத்தை இயக்கியிருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு தர்பார் படம் வசூல் செய்யாமல் அங்கு படுதோல்வியை சந்தித்துள்ளது.

இரண்டு படம்

இரண்டு படம்

தீபிகா படுகோனின் சபாக் மற்றும் அஜய் தேவ்கனின் தானாஜி ஆகிய இருபடங்களும் பாலிவுட்டில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சபாக் படத்தைக் காட்டிலும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட தானாஜி படம் தான் வசூலில் வாகை சூடியுள்ளது.

பொங்கல் கலெக்‌ஷன்

பொங்கல் கலெக்‌ஷன்

இந்த பொங்கலுக்கு தமிழில் நல்ல கலெக்‌ஷன் பார்த்துள்ளது தனுஷின் பட்டாஸ் படம். கலவையான விமர்சனங்கள் இந்த படத்திற்கும் எழுந்தாலும், பொங்கலுக்கு குடும்பங்கள் கொண்டாடும் படமாக கமர்ஷியல் என்டர்டெயினராக அமைந்து வசூலை குவித்து வருகிறது.

மாமனாருடன் போட்டி

மாமனாருடன் போட்டி

இந்த பொங்கலுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் போட்டி போடும் அளவிற்கு விஜய், அஜித், படங்கள் ரிலீசாகவில்லை. ஆனால், நடிகர் தனுஷ் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு களத்தில் இறங்கி கல்லாக்கட்டியுள்ளார்.

மொரட்டு தமிழன்

அதுமட்டுமின்றி, 7 மணிக்கு தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் வெளியாகும் முன்னதாக மொரட்டு தமிழன் டா பாடல் வீடியோவை வெளியிட்டு டிரெண்டாக்கி வருகிறார் தனுஷ்.

எந்த பாட்டு?

எந்த பாட்டு?

மொரட்டு தமிழன் டா மற்றும் சும்மா கிழி ஆகிய இரு பாடல்களும் இன்று வெளியாகவுள்ள நிலையில், யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் எந்த பாடல் இருக்கும் என்ற போட்டியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Read more about: dhanush தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X