செல்வராகன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார்.. டைட்டிலே தாறுமாறா இருக்கே.. நல்ல காம்பினேஷன்!
சென்னை: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் 'மெண்டல் மனதில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை செல்வராகவனின் தம்பியும் நடிகருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 'மெண்டல் மனதில்' எனும் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிகக் அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்சிக்யூட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.

காதல் கொண்டேன், '7 ஜி ரெயின்போ காலனி ', 'ஆடவரி மாதலக்கு அர்த்தலே வெருள' ( 'யாரடி நீ மோகினி') ஆகிய காதல் படைப்புகளுக்கு பிறகு மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் காதல் திரைப்படமாக 'மெண்டல் மனதில்' உருவாகிறது என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் சரியாக அமையாத நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். தனுஷ் ஏகப்பட்ட படங்களில் பிசியாக உள்ள நிலையில், புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 படங்களை ஆரம்பிப்பதற்கு முன்னதாக செல்வராகவன் இந்த படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ், திவ்ய பாரதி நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், மெண்டல் மனதில் படமும் வரும் 2025ம் ஆண்டு வெளியாகும் என்றும் இந்த படம் இளமை துள்ளலாக உருவாகப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மனைவியை விவாகரத்து செய்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் காதல் படத்தில் நடிக்கப் போகிறாரே என சினிமா வட்டாரத்தில் ஏகப்பட்ட பேச்சுகளும் அடிபட்டு வருகின்றன. ஜி.வி. பிரகாஷ் மற்றும் செல்வராகவனுக்கு இந்த படம் கம்பேக் படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











