தன் படத்தை கைவிட்டபோதும், கார்த்திக் சுப்புராஜுக்கு கைகொடுத்த தனுஷ்!
Recommended Video

சென்னை : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபு தேவா, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்திருக்கும் 'மெர்க்குரி' படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தன் படத்தை இயக்காமல் கைவிட்டபோதும் கார்த்திக் சுப்புராஜுக்கு கை கொடுத்துள்ளார் தனுஷ்.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக ஒரு திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கிய நிலையில் திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜூக்கு கிடைத்தது.

இதனால் கார்த்திக் சுப்புராஜ் தனுஷ் படத்தை கைவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி முடித்துள்ள 'மெர்க்குரி' படத்தின் டீசரை தனுஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
வசனமே இல்லாமல் சைலண்ட் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. வசனம் இல்லாததால் பல மாநிலங்களிலும் வெளியிடப்பட இருக்கிறது 'மெர்க்குரி' திரைப்படம்.
பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன் உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











