‘வெள்ளை யானை‘ வெண்ணிலா பாடலை தனுஷ் வெளியிடுகிறார் !

சென்னை : வெள்ளை யானை படத்தில் வரும் வெண்ணிலா பாடலை நடிகர் தனுஷ் வரும் 24 ஆம் தேதி வெளியிடுகிறார் என்று படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வெள்ளை யானை. இப்படத்தில் சமுத்திரக்கனி ஒரு விவசாயியாக நடிக்கிறார். விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் ,இன்றைய வாழ்வில் விவசாயம் எவ்வளவு அழிந்து வருகின்றது என்பதை உணர்ந்தும் கதை தான் இந்த வெள்ளை யானை.

Dhanush releases vellai yaanai song on 24th
திருடா திருடி படத்தை இயக்கிய சுப்பிரமணியம் சிவா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். வெள்ளை யானை படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தனுஷை வைத்து தனது முதல் திரைப்படமான திருடா திருடி படத்தை இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார் சிவா.

Dhanush releases vellai yaanai song on 24th

மீண்டும் நான்கு ஆண்டுகள் கழித்து ஜீவாவை வைத்து பொறி என்ற படத்தை இயக்கினார் சுப்பிரமணியம் சிவா. பின்னர் இயக்குனர் அமீரை வைத்து இவர் இயக்கிய படம் தான் யோகி. இந்த படத்தில் அமீர் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இதன் பின் மீண்டும் தனுசை வைத்து சீடன் என்ற படத்தை இயக்கினார் சுப்பிரமணியம் சிவா. இப்படம் கலவையான விமர்சனம் பெற்றது. இயக்குனராக மட்டுமின்றி வட சென்னை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற அசுரன் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும், சுப்பிரமணியம் சிவா. அமலா பால் நடித்த அம்மா கணக்கு படத்திற்கு வசனமும் எழுதி உள்ளார்.

Dhanush releases vellai yaanai song on 24th

தற்போது, இவர் இயக்கி வரும் வெள்ளை யானை படத்தில் வரும் வெண்ணிலா பாடலை நடிகர் தனுஷ் வரும் 24 ஆம் தேதி வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இயக்குனர் ராஜு முருகன் பாடலை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X