கருப்பன் குசும்புக்காரன்.. இளையராஜா மட்டுமில்லை சூப்பர் ஸ்டார் பயோபிக்கிலும் நடிக்கணும்.. தனுஷ் ஆசை!

சென்னை: இசைஞானி என இசை உலகமே போற்றப்படும் இளையராஜாவின் பயோபிக் படத்தின் பூஜை மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு இன்று வெளியானது. அந்த நிகழ்ச்சியில் இளையராஜா, கமல்ஹாசன் மற்றும் தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று உள்ளனர். மேடை ஏறி பேசிய தனுஷ் இளையராஜாவாக நடிக்க வேண்டும் என பல இரவுகள் கனவு கண்டிருக்கிறேன் என்றும் பயோபிக் படங்களில் நடித்தால் இந்த இருவரது படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு என தனுஷ் பேசியிருக்கிறார்.

இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க உள்ளார். முன்னதாக இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதன் பின்னர் அருண் மாதேஸ்வரன் தான் இந்தப் படத்தை இயக்க சரியான ஆள் என தனுஷ் டிக் செய்திருக்கிறார்.

Dhanush reveals his dream wish to act in Ilayaraja and Super Star biopics

கேப்டன் மில்லர்: இந்த ஆண்டு பொங்கலுக்கு தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் வில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். ஈழத்துப் போராட்டத்தை மையப்படுத்திய கதையை அதேபோல எடுக்க முடியாத சூழ்நிலையில், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் படமாக மாற்றி எடுத்திருப்பார். அதன் விளைவாகவே படம் பலருக்கும் புரியாமல் போய் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை.

அருண் மாதேஸ்வரன்: வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் வெளியான ராக்கி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். அந்த படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவனை வைத்து சாணிக் காயிதம் படத்தை இயக்கினார். அந்த படமும் அவருக்கு நல்ல இயக்குநர் என்கிற பெயரை வாங்கிக் கொடுத்தாலும் வெற்றி இயக்குநர் என்கிற அந்தஸ்த்தை கொடுக்கவில்லை. ஆனால், தரமான படங்களை கொடுக்கக் கூடியவர் இவர் என முழு நம்பிக்கைக் கொண்டே கேப்டன் மில்லர் படத்தில் நடித்த தனுஷ், அதன் 2ம் பாகத்தை அருண் மாதேஸ்வரன் உடன் ஆரம்பிக்காமல் இளையராஜா பயோபிக் படத்தை ஆரம்பித்துள்ளார்.

Dhanush reveals his dream wish to act in Ilayaraja and Super Star biopics

இளையராஜா, கமல்ஹாசன் பங்கேற்பு: சென்னையில் இன்று நடைபெற்ற இளையராஜா பயோபிக் படத்தின் பூஜை மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், அவரது தீவிர ரசிகரான கமல்ஹாசனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது ரசிகர்களை மட்டுமின்றி சினிமா பிரபலங்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வெற்றிக்கே குணா படமும் அதில் இடம்பெற்ற இளையராஜாவின் "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல" என்கிற வரிகள் இடம்பெறும் "கண்மணி அன்போடு காதலன்" பாடல் தான் அந்த படம் 200 கோடி வசூல் செய்ய காரணம் என பலரும் கூறுகின்றனர்.

Dhanush reveals his dream wish to act in Ilayaraja and Super Star biopics

இளையராஜா, சூப்பர் ஸ்டார் பயோபிக்: அனைவரும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் இளையராஜா பாடல்களை கேட்டு விட்டு தான் தூங்குவார்கள். நான் இளையராஜா போல நடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன் அதற்கான பயிற்சியை செய்து கொண்டே இருந்து வந்தேன். இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்க வேண்டும் என பல ஆண்டுகள் தவம் கிடந்து வந்த நிலையில், அந்த வாய்ப்பு தற்போது எனக்கு கிடைத்திருக்கிறது. பயோபிக் படங்கள் செய்தால் இருவரது படங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என சிறுவயதிலிருந்தே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒன்று இளையராஜா இன்னொருவர் சூப்பர் ஸ்டார் என தனுஷ் தனது வாழ்நாள் கனவை நெகிழ்ச்சியுடன் மேடையில் கூறியுள்ளார். கருப்பன் குசும்புக்காரன் அடுத்து சூப்பர் ஸ்டார் பயோபிக்கிற்கும் அடி போட்டு விட்டாரே என ரசிகர்கள் கலாய்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Dhanush reveals his dream wish to act in Ilayaraja and Super Star biopics

ரசித்துப் பார்த்த கமல்: உலக நாயகனை மேடையில் வைத்துக் கொண்டே இளையராஜா மற்றும் சூப்பர் ஸ்டார் பயோபிக் படங்களில் நடிக்க வேண்டும் என தனது மனதில் இருந்ததை அப்படியே தனுஷ் பேசியதை கமல்ஹாசன் ரசித்துப் பார்த்த காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும், இளையராஜா பயோபிக் உருவாக வேண்டும் என்பது கமல்ஹாசனின் நெடுநாள் ஆசை என்றும் அவர் பேசியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X