போயஸ் கார்டனில் வீடு கட்ட ஆசைப்பட்டது ஏன்?.. ராயன் ஆடியோ லாஞ்சில் காரணத்தை சொன்ன தனுஷ்!

சென்னை: நடிகர் தனுஷுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரஜினிகாந்த் வீட்டில் மரியாதை கிடைக்கவில்லை என்கிற வெறியில் தான் அவர் போயஸ் கார்டனில் வீடு கட்டினார் என செய்யாறு பாலு உள்ளிட்ட பலர் வீடியோக்களில் பேசி வந்த நிலையில், போயஸ் கார்டனில் தான் ஏன் வீடு கட்டினேன் என தனுஷ் நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

அப்படியே ரஜினிகாந்தின் மேனரிசத்துடன் மரியான் படத்தில் இருந்து நடிக்கத் தொடங்கிய தனுஷ் மாப்பிள்ளை, படிக்காதவன், பொல்லாதவன் என ரஜினிகாந்த் நடித்த படங்களின் டைட்டில்களையே தனது படங்களுக்கும் வைத்து பாப்புலரானார்.

Dhanush raayan rajinikanth

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்தாலும் தொடர்ந்து தலைவர் மீது உள்ள மரியாதை மற்றும் என்னைக்குமே தான் தலைவர் ரசிகன் தான் என்பதை கூறி வரும் தனுஷ் ராயன் இசை வெளியீட்டு விழாவிலும் ரஜினிகாந்த் பற்றி பேசி ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கினார்.

தவறான பேச்சுக்கள்: ஊரில் எந்த சினிமா பிரபலத்துக்கு விவாகரத்து ஆனாலும், அதற்கு தனுஷ் தான் காரணம் என்கிற அளவுக்கு யூடியூபர்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், "நான் யாருன்னு எனக்குத் தெரியும், என்னை படைச்ச அந்த சிவனுக்குத் தெரியும், என் அப்பா, அம்மாவுக்குத் தெரியும், என் பசங்களுக்குத் தெரியும், என் ரசிகர்களுக்குத் தெரியும்" என பேசிய தனுஷ் தன்னை பற்றி பின்னாடி பேசுபவர்கள் பற்றியும் முதுகில் குத்துபவர்கள் பற்றியும் பேசினார்.

போயஸ் கார்டனில் வீடு ஏன்?: ரஜினிகாந்த், விஜய்யை தொடர்ந்து குட்டி ஸ்டோரி சொல்வது போல போயஸ் கார்டனில் தான் ஏன் வீடு வாங்க ஆசைப்பட்டேன் என்பது குறித்து தனுஷ் பேசியது ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. தலைவர் வீட்டை பார்க்க வேண்டும் என போயஸ் கார்டனுக்கு சென்றேன். போலீஸ் அண்ணன்கள் சிலர் இருந்தனர். அவர்களிடம் கேட்டதற்கு அங்க தான் இருக்கு சைலன்ட்டா பார்த்து விட்டு போயிடணும்னு சொன்னாங்க, நானும் தலைவர் வீட்டை பார்த்து விட்டு சந்தோஷமாக திரும்பினால், அங்கே இன்னொரு வீட்டுக்கு முன் ஜே ஜேன்னு கூட்டம். அது யாரு வீடுன்னு கேட்டதற்கு ஜெயலலிதாம்மா வீடுன்னு சொன்னாங்க, அப்படியே வியந்து போய் விட்டேன். இந்த பக்கம் ரஜினி சார் வீடு, அந்த பக்கம் ஜெயலலிதாம்மா வீடு நடுவில் நம்ம வீடு கட்டினா எப்படி இருக்கும் என தனுஷ் சொல்வதற்கு முன்பாகவே ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து விட்டனர்.

ராயன் வெல்வானா?: இந்த ஆண்டு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச விருது விழாவில் சிறந்த படம் என்கிற விருதை வென்றது. தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள நிலையில், பவர்ஹவுஸ் பர்ஃபார்மன்ஸ் படமாக ராயன் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X