கோலிவுட்டின் ரூலர் தனுஷ்.. கொடிகட்டி பறக்கும் டிரெண்டிங்.. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சா?

சென்னை: நடிகர் தனுஷ் தான் கோலிவுட்டின் ரூலர் என்ற டிரெண்டிங் தற்போது #DHANUSH_RulerOfKollywood என்ற ஹாஷ்டேக்கில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Kaka Muttai சின்ன பசங்க இப்போ Hero மாறி இருக்காங்க | Dhanush

காலையில் இருந்தே ஓராண்டை கடந்த என்.ஜி.கே திரைப்படம் டிரெண்டாகி வந்த நிலையில், தற்போது அதற்கு போட்டியாக இந்த ஹாஷ்டேக் டிரெண்டாகி உள்ளது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ், தற்போது, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என கொடிகட்டி பறக்கிறார்.

மீசையை எடுத்தா

மீசையை எடுத்தா

தனுஷ் பற்றிய பல சிறப்பான விஷயங்களை அவரது ரசிகர்கள் இந்த ஹாஷ்டேக்கின் கீழ் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். ஜகமே தந்திரம் படத்தின் சுருளி லுக்கில் தனுஷ் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இதில், மீசையை மட்டும் எடுத்துப் பாருங்க அப்படியே பொல்லாதவன் பிரபு மாதிரி இருக்கிறார் என பதிவிட்டுள்ளனர்.

உலக தர நடிகர்

உலக தர நடிகர்

எப்போது வேண்டுமானால், இளமை பருவத்துக்கு மாறும் உடல்வாகு இயற்கையாகவே நடிகர் தனுஷுக்கு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான அசுரன், பட்டாஸ் படங்களில் யங் தனுஷை ரசிகர்கள் கண்டு ரசித்தனர். பிரெஞ்சு மொழியில் வெளியான ஜர்னி ஆஃப் ஃபகீர் படத்தில் நடித்த தனுஷ், உண்மையாகவே ஒரு உலக தர நடிகர் தான்.

தனக்கென தனி ஸ்டைல்

தனக்கென தனி ஸ்டைல்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. தனக்கென தனி ஸ்டைலை கொண்டு கெத்தாக நடிக்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். மாஸ், கிளாஸ், ரொமான்ஸ், கல்ட், காமெடி என அத்தனை வெரைட்டி படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் இந்த 'மாரி' நடிகர்.

ஆஸ்கர் பாக்கி

ஆஸ்கர் பாக்கி

27 வயதிலேயே ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச் சென்ற நடிகர் தனுஷின் சூப்பரான நடிப்புக்கு இன்னும் ஆஸ்கர் விருது மட்டுமே பாக்கியாக இருப்பதாக அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், தனுஷ் சொன்ன "எண்ணம் போல் வாழ்க்கை" என்ற வசனத்தையும் வைரலாக்கி வருகின்றனர்.

தரமான சம்பவம்

தரமான சம்பவம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படம் தனுஷுக்கு மற்றொரு மைல் கல்லாக திரையுலகில் அமையும் என பல ரசிகர்களும் கருதி வருகின்றனர். மேலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டராக நடித்து தரமான சம்பவம் செய்யப்போகும் ஜகமே தந்திரம் படத்துக்கும் ரசிகர்கள் வெயிட்டிங்.

அவங்களுக்கு பிறகு

அவங்களுக்கு பிறகு

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலக நாயகன் கமல்ஹாசன், சியான் விக்ரமுக்கு பிறகு, தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கட்டிப் போடும் காந்த சக்தி கொண்டவர் தனுஷ் என தனுஷ் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றிமாறன் கூட்டணியில் அவர் நடித்த படங்கள் எல்லாமே அதற்கு சாட்சியாக இருக்கிறது என்கின்றனர்.

அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சா

அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சா

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் சட்டையை பிடித்து மல்லுக்கட்டி ஷமிதாப் படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருப்பார். ரியல் லைஃபில் மாமனார் ஆன சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் தனுஷ் சேர்ந்து நடிச்சா, அந்த படத்தின் எதிர்பார்ப்பும் வசூலும் விண்ணைத் தொடும் என டிரெண்ட் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X