இது வீடா... இல்ல அரண்மனையா..150 கோடியில் போயஸ் கார்டனில் வீடு.. குடும்பத்துடன் குடியேறிய தனுஷ்..

சென்னை : நடிகர் தனுஷின் போயஸ் கார்டனில் குடும்பத்துடன் குடியேறி உள்ளார். வீட்டைப்பார்த்த ரசிகர்கள் இது வீடா இல்லை அரண்மனையா என வியந்து போய் உள்ளனர்.

தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வாத்தி திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

மேலும் நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படங்களில் நடித்து வருகிறார். அடுத்து சேகர் கம்முலா இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் ஐஸ்வர்யா ரஜினிக்கும் முக்கியமான பங்கு உண்டு என்று சொல்லலாம். ரஜினியின் மருமகன் என்பதால், பல இயக்குநர்கள் தனுசை தேடிச் சென்று கதை சொன்னார்கள். அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட தனுஷ், பல திரைப்படங்களில் தனது திறமையை நிரூபித்து, கோலிவுட், பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என புகழின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

பிரிந்தனர்

பிரிந்தனர்

தனது திரைப்பயணத்திற்கு பக்கபலமாக இருந்த மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒன்றாக அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்து அறிவிப்புக்கு பின் தனுஷ் பெயரை இன்ஸ்டாவில் இருந்து நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றிவிட்டார்.

நடக்கவில்லை

நடக்கவில்லை

இந்த பிரிவு நிரந்தரம் இல்லை இருவரும் நிச்சயம் சேர்ந்து விடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவை அனைத்தும் போய்யானது. அண்மையில் தனுஷின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு தனுஷ் - ஐஸ்வர்யா இருவருமே ஒன்றாக கலந்து கொண்டனர். அதன் பின் விவாகரத்து முடிவை கைவிடுவதாகவும் மீண்டும் இணைந்து வாழவிருப்பதாகவும் சொல்லப்பட்டது, ஆனால் அதுவும் நடக்காமல் போனது.

வீடா, இல்ல அரண்மனையா

வீடா, இல்ல அரண்மனையா

தனுஷ் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் பிரம்மாண்டமான வீடு கட்டி வருகிறார். இந்த வீடு கட்டும் பிரச்சனையில் தான் தனுஷுக்கு பண நெருக்கடி ஏற்பட்டு இருவருக்கு இடையே வாக்குவாதம் உண்டாகி பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது, நடிகர் தனுஷ் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வீடா, இல்ல அரண்மனையா என தெரியாத அளவிற்கு பிரம்மாண்டமான வீடு கட்டி அம்மா, அப்பாவுடன் குடியேறியுள்ளார்.

தனுஷின் புதிய வீடு, கோவில் உணர்வு

தனுஷின் புதிய வீடு, கோவில் உணர்வு

இந்த போட்டோவை திருடா திருடி பட இயக்குநர் சுப்பிரமணியம் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதில் தம்பி தனுஷின் புதிய வீடு, கோவில் உணர்வு எனக்கு.. வாழும் போதே தாய், தந்தையை சொர்க்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள், தெய்வமாக உணரப்படுகிறார்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X