சமீபத்திய தனுஷ் படங்களைக் கவனிச்சீங்களா...?
சென்னை: தனுஷின் சமீபத்திய படங்களைக் கூர்ந்து கவனித்தீர்களானால் ஒரு விஷயம் உங்களுக்கு நன்றாகவே புலப்படும்.
அது தனுஷிற்கு பறவைகள் மற்றும் விலங்குகள் மீதுள்ள ஆர்வம் தான். அவருடைய சமீபத்திய படங்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு பறவை அல்லது விலங்கு தவறாமல் இடம் பெற்று விடுவது குறிப்பிடத்தக்கது.
இது தனுஷின் ஆர்வத்தினால் உடன் சேர்க்கப்பட்ட கதாபாத்திரங்களா அல்லது ஏற்கனவே கதையில் உருவாக்கப்பட்டவையா அல்லது ஏதேனும் செண்டிமெண்டா என்பதை இனி வரும் படங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும்.

ஆடுகளம் சேவல்...
தனுஷிற்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தப் படமான ஆடுகளத்தில் கையில் சேவலுடன் போஸ் தந்தார் தனுஷ். மேலும் அதனைத் தன் தம்பி எனவும் படத்தில் குறிப்பிடுவார்.

மரியான்ல மீனு...
தற்போது வெளியாகியுள்ள மரியான் படத்தில் கையில் மீனைப் பிடித்தவாரு போஸ் தருகிறார் தனுஷ். மேலும் படத்தின் ஒரு காட்சியில் சிறுத்தையுடன் சண்டை போட்டுள்ளாராம் தனுஷ்.

புறவுடன் தனுஷ்...
அடுத்து வெளிவர இருக்கிற ‘நையாண்டி' படப் போஸ்டர்களில் கையில் புறாவுடன் காட்சித் தருகிறார் தனுஷ்.

மசாக்கலி சோனம்...
முன்பொரு பேட்டியில், ‘சோனம் தான் ரஞ்ச்னா படத்தின் நாயகி என்றாதும், மசாக்கலி பாடலில் தலையில் புறாவுடன் சோனம் ஆடுவது தான் நினைவிற்கு வந்தது' என தனுஷ் நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











