அசுரன்.. கிரீன் சிக்னல் தந்த சென்சார்.. நிம்மதி பெருமூச்சு விட்ட தாணு.. தனுஷ் ரசிகர்களும் ஹேப்பி!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்திற்கு சென்சாரில் யூ/ஏ சான்று கிடைத்துள்ளது.
Recommended Video
சென்னை: தனுஷின் அசுரன் படத்திற்கு சென்சாரில் யூ/ஏ சான்று கிடைத்துள்ளது.
வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் அசுரன். பூமணி எழுதிய வெக்கை எனும் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் இது. அக்டோபர் 4ம் தேதி படம் வெளியாகிறது.
அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. டிரெய்லரின் ஓப்பனிங்கிலேயே தனுஷ் அரிவாளுடன் தான் என்ட்ரி கொடுத்தார். பட்டாக்கத்தி, குத்தீட்டி, நாட்டு வெடிகுண்டு, பகை, துரோகம், வன்முறை என ரத்தமும் சதையுமாக தான் டிரெய்லர் இருந்தது.

இதனால் படத்துக்கு என்ன சான்று கொடுக்கப் போகிறார்கள் சென்சார் அதிகாரிகள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. ஒரு சில வன்முறை காட்சிகளுக்கு மட்டும் சென்சார் அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனால் படத்தில் இருந்து காட்சிகள் எதையும் நீக்க சொல்லவில்லை.
அதேபோல் படத்தில் கெட்ட வார்த்தைகள் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க நெல்லை சுற்றுவட்டார பாஷை என்பதால், வசனங்களுக்கு எந்த மியூட்டும் கொடுக்கவில்லையாம். நீண்ட பரிசீலனைக்கு பிறகு அசுரன் படத்தற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ/ஏ' சான்று வழங்கியுள்ளனர். இதனால் தயாரிப்பாளர் தானு மகிழ்ச்சியில் இருக்கிறார். யூ/ஏ என்பது பெற்றோர் துணையுடன் சிறுவர்கள் பார்க்கக் கூடிய படம் என்பது பொருளாகும்.
வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் இதற்கு முன்பு வெளிவந்த வடசென்னை படத்தில் நிறைய கெட்டவார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. ஒருவர், இருவர் என இல்லாமல் படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் சரளமாக கெட்டவார்த்தை பேசின. அதேபோல் வன்முறை காட்சிகளும் அதிகம் இருந்தன. இதனால் படத்திற்கு ஏ சான்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications