திடீர் ‘அசுரன்’ சர்ப்பிரைஸ் தந்த தனுஷ்... ஆனா நீங்க எதிர்பார்த்தது நடக்காது ரசிகாஸ்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'வடசென்னை' படத்தை தொடர்ந்து வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் 'அசுரன்'. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார்.

Dhanushs Asuran Releasing on October 4

இயக்குனர் பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஷகீலா, பசுபதி, 'ஆடுகளம்' நரேன், பவன், யோகி பாபு, தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கே படு மிரட்டலாக இருந்தது. அசுரனில் தனுஷின் நடிப்பு அட்டகாசமாக, அதேசமயம் வித்தியாசமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் மூன்று கெட்டப்புகளில் தனுஷ் நடிக்கிறார்.

வடசென்னை படம் வெற்றிப் படமாக அமைந்தாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை. என இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார்கள் தனுஷும், வெற்றிமாறனும். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அசுரன் திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X