கொண்டாடும் ரசிகர்கள்... கோல்டன் குளோப் விழாவில் தனுஷின் அசுரன், சூர்யாவின் சூரரைப் போற்று!
சென்னை: கோல்டன் குளோப் விருது விழாவில் தனுஷின் அசுரன், சூர்யாவின் சூரைப் போற்று படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.
புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது ஒவ்வொரு வருடமும் திரைப்படம் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
78 வது கோல்டன் குளோப் விருது விழா, அடுத்த வருடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

விதிமுறைகள்
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு போட்டிக்குச் சில விதிமுறைகளை மாற்றி அமைத்தனர். அதன்படி ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களும் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளில் போட்டியிட தகுதியானவை என அறிவித்தனர். இதனால் பல மொழிகளிலிருந்து படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கோல்டன் குளோப்
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பட்டியல் கோல்டன் குளோப் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழிலிருந்து தனுஷின் அசுரன், சூர்யாவின் சூரரைப் போற்று படங்கள் திரையிடத் தேர்வாகியுள்ளன. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

அமேசான் பிரைம்
இதில் அபர்ணா பாலமுரளி ஹீரோயின். பரேஸ் ராவல், ஊர்வசி, மோகன்பாபு, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படம் அமேசான் பிரைமில் நவம்பர் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகி, நல்ல வரவேற்பை பெற்றது.

விமானப் பயணம்
இந்த படத்தில், சூர்யாவின் மாறா கேரக்டரை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். இயக்குனர் சுதா கொங்கராவையும் பாராட்டினர். சாதாரண மக்களும் விமானப் பயணம் செய்வதற்காக பட்ஜெட் விமானப் போக்குவரத்தை துவக்கிய ஏர்டெக்கான் கோபிநாத்தின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம்.
Recommended Video

மலையாள ஜல்லிக்கட்டு
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் இந்தியன் பனோரமாவில் திரையிட தேர்வாகி இருப்பதாக நேற்றுதான் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதற்கு அடுத்த கவுரவமாக, கோல்டன் குளோப் திரையிடல் பெருமை கிடைத்துள்ளது. இந்தப் படங்களோடு மலையாள படமான 'ஜல்லிக்கட்டு'ம் இணைந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











