தனுஷின் 3வது பாலிவுட் படம்.. அட்ராங்கி ரே ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: தனுஷின் மூன்றாவது பாலிவுட் படமான அட்ராங்கி ரே படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் தரமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். எந்த மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் பிச்சு உதறி வருகிறார். தமிழ் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ்.

ஆனந்த் எல் ராய் இயக்கிய ராஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார் தனுஷ். இதையடுத்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸனுடன் சேர்ந்து ஷமிதாப் படத்தில் நடித்தார்.

அட்ராங்கி ரே

அட்ராங்கி ரே

இந்நிலையில் தனுஷ் நடிக்கும் மூன்றாவது இந்திப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இவர் தனுஷின் முதல் இந்திப் படமான ராஞ்சனாவை இயக்கியிருந்தார். அட்ராங்கி ரே என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சாரா அலிகான் மற்றும் நடிகர் அக்ஷய் குமார் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

ஷூட்டிங் முடிந்தது..

ஷூட்டிங் முடிந்தது..

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 'அட்ரங்கி ரே' படத்தின் கதையை ஹிமான்ஷு சர்மா எழுதியுள்ளார. அட்ரங்கி ரே படத்தின் ஷுட்டிங் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வாரணாசியில் தொடங்கியது. தனுஷ் டிசம்பரில் தனது பகுதி படப்பிடிப்பை முடித்தார்.

ஷாஜகான் கெட்அப்

ஷாஜகான் கெட்அப்

அட்ராங்கி ரே படம் வாரணாசி மற்றும் மதுரையில் காட்சியாக்கப்பட்டது. கடைசியாக டெல்லி மற்றும் தாஜ்மஹாலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அக்ஷய் குமார், முகலாய பேரரசர் ஷாஜகானாக உடையணிந்து, தாஜ் முன் நிற்கும் புகைப்படங்கள் டிசம்பர் மாத தொடக்கத்தில் வைரலாகின.

ஹாலிவுட் படம்

ஹாலிவுட் படம்

இந்நிலையில் அட்ராங்கி ரே படம் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ருசோ சகோதரர்கள் இயக்கும் தனது ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' படப்பிடிப்பிற்காக தனுஷ் சமீபத்தில் அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X