தனுஷின் புது சொகுசு வீடு எப்படி இருக்கு?...விபரங்கள் இதோ...

சென்னை : தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் பெரிய நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் தனுஷ். சமீபத்தில் தனுஷ் நடித்து வெளி வந்த அசுரன் படம் தியேட்டரில் ரிலீசான ஒரு மாதத்திற்குள்ளாகவே ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.

மற்றொரு புறம் தேசிய விருதினையும் பெற்றது. இந்த படத்தின் மூலம் தனுஷிற்கு இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்தது. அடுத்தபடியாக தனுஷ் நடித்த கர்ணன் படமும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

8 கிரவுண்டில் சொகுசு வீடு

8 கிரவுண்டில் சொகுசு வீடு

இதற்கிடையில் சென்னையில் ரஜினி வீடு அமைந்திருக்கும் போயஸ் கார்டன் பகுதியிலேயே புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார் தனுஷ். போயஸ் கார்டனில் வாங்கிய 8 கிரவுண்ட் இடத்தில் சமீபத்தில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் ரஜினி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

என்னவெல்லாம் இருக்கு

என்னவெல்லாம் இருக்கு

தனுஷின் இந்த கனவு வீடு சுமார் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறதாம். தனது புதிய வீட்டை தனஷ் தான் வடிவமைத்துள்ளாராம். இந்த வீட்டில் நீச்சல்குளம், உள்விளையாட்டு அரங்கு வசதி, அனைத்து உபகரணங்களையும் கொண்ட ஜிம், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஹோம் தியேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளதாம்.

உலக தரத்தில் வடிவமைத்த தனுஷ்

உலக தரத்தில் வடிவமைத்த தனுஷ்

தனது வீட்டின் படுக்கை அறைகள், சமையலறை, டைனிங் ரூம் என அனைத்தையும் சர்வதேச தரத்தில் வடிவமைத்திருக்கிறாராம் தனுஷ். விரைவில் இந்த வீட்டின் கட்டிட பணிகள் முடிவடைய உள்ளதாம். அடுத்த ஆண்டு துவக்கத்தில் வீட்டின் கிரஹபிரவேஷத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

படங்களில் பிஸியோ பிஸி

படங்களில் பிஸியோ பிஸி

வீட்டின் வேலைகள் ஒரு புறம் மும்மரமாக நடந்து வரும் நிலையில், தனுஷும் தனது அடுத்தடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். பாலிவுட்டில் சாரா அலிகானுடன் நடிக்கும் அத்ரங்கி ரி, தமிழில் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, மாளவிகா மோகனனுடன் டி 43, ஹாலிவுட்டில் தி கிரே மேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

ரூ.50 கோடி சம்பளம் கேட்ட தனுஷ்

ரூ.50 கோடி சம்பளம் கேட்ட தனுஷ்

இத்துடன் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க டைரக்டர் சேகர் கம்முலா தனுஷை அணுகி உள்ளார். பல மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட உள்ள இந்த படத்தில் நடிக்க ரூ.50 கோடியை சம்பளமாக கேட்டுள்ளாராம் தனுஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X