பரபரக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் ஷூட்டிங் ஸ்பாட்… அசுர வேகத்தில் முதல் அப்டேட் கொடுத்த டீம்!
சென்னை: தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்
கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கிய நிலையில், அதன் வீடியோ புதிய சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில், கேப்டன் மில்லர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தரமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

மீண்டும் பிஸியான தனுஷ்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் செப்டம்பர் 29ம் தேதி வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், இரட்டை வேடங்களில் நடித்துள்ள தனுஷின் ஆக்டிங் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் தனுஷ். அருண்மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

வேகமெடுக்கும் ஷூட்டிங்
பீரியட் திரைப்படமாக உருவாகும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு செப்டம்பர் 22ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது தென்காசி பகுதியில் உள்ள காடுகளில் நடைபெற்று வருகிறது.. ராக்கி, சாணிக் காயிதம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்சன் காட்சிகளை ரொம்பவே ராவாக எடுக்கும் அருண் மாதேஸ்வரன், தனுஷை எப்படி டீல் செய்யப் போகிறார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஓவர்
கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் தனுஷ், பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன், குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கேப்டன் மில்லர் பூஜைக்கு சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வேஷ்டி சட்டையுடன் வந்து மாஸ் காட்டியிருந்தார் தனுஷ். ஆனால், படத்தில் அவரது லுக் எப்படி இருக்கும் என இதுவரை எதுவும் தெரியவில்லை. இந்நிலையில், தென்காசியில் தொடங்கிய ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரேகட்டமாக ஷூட்டிங்
கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு தனுஷ் அடுத்தடுத்து மேலும் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால், கேப்டன் மில்லர் படத்திற்காக மொத்தமாக கால்ஷீட் கொடுத்துள்ளாராம். மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டாலும் விரைவில் அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை தொடங்க அருண்மாதேஸ்வரன் முடிவு செய்துள்ளாராம். இதனால், கேப்டன் மில்லர் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வரும் என தெரிகிறது. இந்த அப்டேட் தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications