கேப்டன் மில்லரின் புதிய லுக்.. வெளியான தனுஷின் போட்டோ... படத்தில் இணைந்த வில்லன் நடிகர்?

சென்னை : நடிகர் தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகவுள்ள படம் கேப்டன் மில்லர்.

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் கூட்டணியில் ஓடிடியில் வெளியான சாணிக் காயிதம் படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அவரது நானே வருவேன் படம் ரிலீசாக உள்ளது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ், தன்னுடைய படங்களை எப்போதுமே சிறப்பான கவனத்துடன் தேர்ந்தெடுத்து வருபவர், கோலிவுட்டின் நடிகராக இருந்தாலும் தன்னை கோலிவுட்டிலேயே முடக்கி கொள்ளாமல், தொடர்ந்து பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

பாலிவுட்டில் விரைவில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மீண்டும் இணையவுள்ள தனுஷ், ரூசோ சகோதரர்களின் அடுத்தப் படத்திலும் நடிப்பார் என்று தெரிகிறது. தி க்ரே மேன் பிரமோஷனின்போது அவர்கள் இந்த தகவலை வெளியிட்டனர். தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் நிலையில், இதன்மூலம் டோலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை கொடுக்கவுள்ளார் தனுஷ்.

திருச்சிற்றம்பலம் படம்

திருச்சிற்றம்பலம் படம்

முன்னதாக அவரது நடிப்பில் கடந்த மாதம் 18ம் தேதி வெளியானது திருச்சிற்றம்பலம். அவருடன் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படம் ஆண் -பெண் நட்பை மையமாக கொண்டு வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

100 கோடி ரூபாய் கிளப்

100 கோடி ரூபாய் கிளப்

படம் வெளியாகி 13 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது. இதன்மூலம் தனுஷ் மகிழ்ச்சியடைந்தாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். காரணம் அவரது அடுத்தடுத்த 4 படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றன.

நானே வருவேன் ரிலீஸ்

நானே வருவேன் ரிலீஸ்

இந்நிலையில் அடுத்ததாக தனுஷின் நானே வருவேன் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ள நிலையில், இந்தக் கூட்டணி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்துள்ளது. படத்தின் ஹீரோ, வில்லன் என இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார் தனுஷ்.

தனுஷின் புதிய லுக்

தனுஷின் புதிய லுக்

இந்தப் படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றன. தனுஷ் அடுத்ததாக அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் இணையவுள்ள நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. மேலும் இந்தப் படத்தில் தனுஷின் லுக்கும் தற்போது வெளியாகியுள்ளது.

நீண்ட தலைமுடி, தாடியுடன் தனுஷ்

நீண்ட தலைமுடி, தாடியுடன் தனுஷ்

நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் இந்த லுக்கில் தனுஷ் உள்ளார். மேலும் கூலர்சுடன் சிரித்தபடி இந்த புகைப்படத்தில் போஸ் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் வில்லனாக ஜான் கொக்கன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா மோகன், சந்தீப் கிஷனும் படத்தில் கேரக்டர்களாக இணையவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X