கேப்டன் மில்லர் பூஜை க்ளிம்ப்ஸ் செய்த வேறலெவல் சாதனை… கெத்து காட்டும் தனுஷ் ரசிகர்கள்!
சென்னை: தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. .
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கிய நிலையில், அதன் வீடியோ புதிய சாதனை படைத்துள்ளது.

தனுஷின் புதிய அவதாரம்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ஒருநாள் முன்பே வெளியான நானே வருவேன், கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், இரட்டை வேடங்களில் நடித்துள்ள தனுஷின் ஆக்டிங் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே கமிட்டான 'வாத்தி' படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்து கேப்டன் மில்லர் ஷூட்டிங்கிலும் தற்போது பிசியாக இருக்கிறார்.

கேப்டன் மில்லர் பூஜை
பீரியட் திரைப்படமாக உருவாகும் கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ராக்கி, சாணிக் காயிதம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆக்சன் காட்சிகளை ரொம்பவே ராவாக எடுப்பதில் கில்லாடியான அருண் மாதேஸ்வரன் தனுஷ் முதன்முறையாக இணைந்துள்ளார். இதனால், இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 22ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

பூஜை க்ளிம்ப்ஸ் சாதனை
கேப்டன் மில்லர் படத்தின் பூஜை வீடியோ கடந்த மாதம் 24ம் தேதி அன்று படக்குழு வெளியிட்டது. அதில், தனுஷ், பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன், குமரவேல், ஜிவி பிரகாஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் பூஜை க்ளிம்ப்ஸ் வீடியோ ஒரு மில்லியன் வீவ்ஸ்களை கடந்து சாதனை படைத்துள்ளது. கேப்டன் மில்லர் பூஜைக்கு சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வேஷ்டி சட்டையுடன் வந்து மாஸ் காட்டியிருந்தார் தனுஷ். அதனால், அவரது ரசிகர்கள் அந்த வீடியோவை செம்ம வைரலாக்கினர்.

கெத்து காட்டும் தனுஷ் ரசிகர்கள்
கேப்டன் மில்லர் படத்தின் பூஜை க்ளிம்ப்ஸ் வீடியோ ஒரு மில்லியன் வீவ்ஸை கடந்துள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் கெத்து காட்டி வருகிறனர். மேலும் இந்த சாதனையை அவர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தென்காசி பகுதிகளில் செட் அமைக்கப்பட்டு பிரமாண்டமாக உருவாகும் கேப்டன் மில்லர் படம், அடுத்தாண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனிடையே கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











