வாத்தியை தொடர்ந்து கேப்டன் மில்லருக்கு வந்த சிக்கல்… தனுஷின் முடிவுக்காக காத்திருக்கும் படக்குழு

சென்னை: தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு தென்காசி பகுதியில் வேகமாக நடைபெற்று வந்தது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வேகமாக முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கேப்டன் மில்லர் ஷூட்டிங்

கேப்டன் மில்லர் ஷூட்டிங்

தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். ராக்கி, சாணிக்காயிதம் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்த அருண் மாதேஸ்வரன் 'கேப்டன் மில்லர்' படத்தை இயக்கி வருகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பீரியட் படமாக தயாராகி வரும் கேப்டன் மில்லர் ஷூட்டிங், சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தென்காசி பகுதியில் உள்ள காடுகளில் படமாக்கப்பட்டு வந்தது. இது முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லராக இருக்கும் என்பதால், முதல் சண்டைக் காட்சிகளை ஷூட் செய்து வருகிறாராம் அருண் மாதேஸ்வரன்.

பிரம்மாண்டமான ஆக்சன் சீன்

பிரம்மாண்டமான ஆக்சன் சீன்

தென்காசி வன பகுதிகளில் ஷூட்டிங் செய்யப்பட்ட தனுஷ் நடித்த மிரட்டலான சண்டைக் காட்சி ஷூட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அதனை போட்டுப் பார்த்த படக்குழுவுக்கு ரொம்பவே திருப்தியாக இருந்ததாகவும், அதனால் அடுத்தடுத்து மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டார்களாம். தனுஷும் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை மொத்தமாக முடித்துவிட்டு, அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தாராம். ஆனால், தற்போது கிடைத்த தகவலின் படி கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் சில சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

3 மாதங்களுக்கு நோ

3 மாதங்களுக்கு நோ

அதன்படி, தற்போது கேரளாவில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால், காடுகளில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாம். மேலும், மழைக் காலம் என்பதால், காட்டுக்குள் ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரம்மாண்டமான செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்படுவதால், மழையில் அவையெல்லாம் உடைந்துவிடும் என படக்குழுவினர் அஞ்சுகின்றனர். இதனால், வேறு வழியே இல்லாமல் 3 மாதங்களுக்கு கேப்டன் மில்லர் சூட்டிங்கை நிறுத்த படக்குழு முடிவெடுத்துள்ளதாம். ஆனால், 3 மாதங்கள் கால்ஷீட் வீணாவதால் தனுஷ் தரப்பில் இருந்து இதுவரை இதற்கு எந்த ரியாக்‌ஷனும் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.

ப்ரீ ரிலீஸ் பிசினஸ்

ப்ரீ ரிலீஸ் பிசினஸ்

அதேநேரம், கேப்டன் மில்லர் படத்திற்கான ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட்ஸ் பிசினஸ் களைக்கட்டத் தொடங்கியுள்ளதாம். இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமை இரண்டும் சேர்த்து 120 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷுடன் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், குமரவேல் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றனர். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தனுஷுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X