அட இவரும் தனுஷ் படத்துல இருக்காரா.. கேப்டன் மில்லர் படத்தின் அடுத்த இணைப்பு... வெளியிட்ட படக்குழு!

சென்னை : நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவுள்ளது.

இந்தப் படத்தின் பிரியங்கா மோகன் தனுஷிற்கு ஜோடியாக இணைந்துள்ளார். படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

இந்தப் படத்தின் கதை கடந்த 1930களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கான நீண்ட முடியுடன் காணப்படும் தனுஷின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் சிறப்பான கதைக்களங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது படங்கள் மாறுப்பட்ட கதைக்களங்களில் வெளியானாலும் கடந்த சில படங்கள் இவருக்கு கைக்கொடுக்கவில்லை. ஓடிடியில் வெளியான இவரது ஜெகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் இவருக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தது.

திருச்சிற்றம்பலம் படம்

திருச்சிற்றம்பலம் படம்

இந்நிலையில் இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது இவரது திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் இந்தப் படம் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தை ஆண் -பெண் நட்பை மையமாக கொண்டு சிறப்பான கதைக்களத்துடன் மித்ரன் ஜவஹர் அணுகியிருந்தார்.

நானே வருவேன் படம்

நானே வருவேன் படம்

இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷின் நானே வருவேன் படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ள நிலையில், இந்தப் படத்தில் முதல்முறையாக ஹீரோ -வில்லன் என இரட்டை கதாபாத்திரங்களில் தனுஷ் நடித்துள்ளார்.

டிசம்பரில் வெளியாகும் வாத்தி படம்

டிசம்பரில் வெளியாகும் வாத்தி படம்

இந்தப்படத்தை தொடர்ந்து தனுஷின் வாத்தி படமும் டிசம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இருமொழிப் படமாக உருவாகியுள்ள நிலையில், இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார் தனுஷ். தெலுங்கில் இந்தப் படம் சார் என்ற பெயரில் ரிலீசாகவுள்ளது.

கேப்டன் மில்லர் படம்

கேப்டன் மில்லர் படம்

இதனிடையே அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், படத்தில் இணையும் கேரக்டர்கள் அடுத்தடுத்து அப்டேட் செய்யப்பட்டு வருகின்றனர். சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் கமிட்டாகியுள்ளனர்.

தனுஷுடன் இணைந்த ஜான் கொக்கேன்

தனுஷுடன் இணைந்த ஜான் கொக்கேன்

இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஜான் கொக்கனும் இணைந்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ள நிலையில், படத்தின் நடிகர்கள் மற்றும் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளது குறித்து அவர் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X