தனுஷ் நம்பிக்கை… அனிருத் நெகிழ்ச்சி…: எல்லாத்துக்கும் காரணம் அந்த பீப் சாங் தானாமே அப்படியா?

சென்னை: தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.

Recommended Video

Thiruchitrambalam | Kutty Story சொன்ன Dhanush, Audio launch சுவாரஸ்யம்! *Kollywood

தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த ஆடியோ வெளியீட்டில் அனிருத்தை தனுஷ் பாராட்ட, பதிலுக்கு அனிருத் நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

கோலிவுட் டூ ஹாலிவுட்

கோலிவுட் டூ ஹாலிவுட்

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சிறப்பாக நடந்த முடிந்தது. கோலிவுட்டில் இருந்து இன்று ஹாலிவுட் வரை கலக்கி வரும் தனுஷுக்கு, 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'யாரடி நீ மோகினி' படத்திற்குப் பிறகு, இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹருடன் இந்தப் படத்தில் தனுஷ் கூட்டணி வைத்துள்ளார். தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் என பெரும் நட்சத்திரப் பட்டாளங்களுடன் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகிறது.

தனுஷின் கண்டுபிடிப்பு

தனுஷின் கண்டுபிடிப்பு

கோலிவுட்டில் இன்று ராக் ஸ்டாராக கலக்கி வரும் அனிருத்தை, '3' படத்தின் மூலம் தனுஷ் தான் மியூசிக் டைரக்டராக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் பணிபுரிந்த இந்த காம்போ, 2015ல் வெளியான 'தங்க மகன்' படத்துடன் பிரேக் அப் ஆனது. அதன் பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு 'திருச்சிற்றம்பலம்' படத்தில் மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது.

தனுஷ் நம்பிக்கை... அனிருத் நெகிழ்ச்சி...

தனுஷ் நம்பிக்கை... அனிருத் நெகிழ்ச்சி...

'திருச்சிற்றம்பலம்' படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், ஆடியோ வெளியீட்டில் பேசிய தனுஷ், "அனிருத் மேல் எனக்கு நம்பிக்கை இருந்ததாகவும், நான் கணித்தபடி அவர் இப்போது கலக்கி வருவாதாக" கூறியிருந்தார். அனிருத்தும் தனுஷின் வார்த்தைகளில் ரொம்பவே நெகிழ்ச்சியாகிப் போக, "தனுஷ் என்மேல ரொம்பவே நம்பிக்கை வைத்துள்ளதாக" பேசியிருந்தார்.

பிரேக் அப் ஆன கதை

பிரேக் அப் ஆன கதை

2015 வரை கோலிவுட்டை கலக்கி வந்த கூட்டணி, அதன்பிறகு இணையாமல் இருந்து வந்தனர். அதேநேரம், அனிருத்துக்கும் பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் எழுந்தன. சிம்புவுடன் அனிருத் இணைந்து வெளியிட்ட 'பீப் பாடல்' தான், இது எல்லாவற்றுக்கும் காரணமாக அமைந்தன. பெண்களைப் பற்றி தரக்குறைவாக உருவாகியிருந்த 'பீப் பாடல்', அனிருத்தின் திரைப் பயணத்தை கேள்விக்குள்ளாக்கியது. அதனாலேயே தனுஷும் அனிருத்தை தன் படங்களுக்கு இசையமைக்க விடாமல் ஓரங்கட்டி வந்தார்.

ஆலுமா டோலுமா கொடுத்த புது ரூட்டு

ஆலுமா டோலுமா கொடுத்த புது ரூட்டு

பீப் சாங் சர்ச்சை விஸ்வரூபமெடுத்திருந்த நேரத்தில், அஜித்தின் 'வேதாளம்' படத்தில் இருந்து 'ஆலுமா டோலுமா' பாடலும் வெளியாகிருந்தது. அந்தப் பாடல் கொடுத்த மிகப் பெரிய ஹிட், அனிருத்தை மீண்டும் பிஸியாக்கியது. தொடர்ந்து அஜித்தின் 'விவேகம்' படத்திற்கும் அனிருத் இசையமைத்தார். இன்னொருபக்கம் லீடிங் ஸ்டாராக வந்துகொண்டிருந்த சிவகார்த்திகேயன் படங்களுக்கும், அனிருத்தே இசையமைத்தார்.

பேட்ட, தர்பார், ஜெயிலர்

பேட்ட, தர்பார், ஜெயிலர்

மெல்ல மெல்ல பீப் சாங் சர்ச்சைகளை கடந்த அனிருத், முதன்முறையாக ரஜினியுடன் 'பேட்ட' படத்தில் இணைந்தார். மரண மாஸ், மெலடி என கலந்துகட்டி அடித்த அனிருத்தின் இசை, ரஜினியையும் மயக்கியது. அதனையடுத்து 'தர்பார்' படத்திலும் இணைந்த இக்கூட்டணி, இப்போது அடுத்து வரவிருக்கும் 'ஜெயிலர்' படம் வரை தொடர்கிறது. இதனிடையே கமலுடன் இணைந்து 'விக்ரம்' படத்திலும் ரசிகர்களை வெறியேற்றினார் அனிருத்.

இப்போ புரியுதா மக்களே

இப்போ புரியுதா மக்களே

ஆரம்பம் முதலே ஏராளமான சர்ச்சைகளில் சிக்கித் தவித்த அனிருத், தற்போது தமிழில் தவிர்க்க முடியாத மியூசிக் டைரக்டர் ஆகிவிட்டார். அதுமட்டும் இல்லாமல், இத்தனை வருடங்களாகத் தன்னை ஒதுக்கி வைத்திருந்த தனுஷுக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்திற்காக ஹிட் பாடல்களைக் கொடுத்து தன்பக்கம் வரவைத்து விட்டார். இதனைத்தான் தனுஷ் அனிருத் மீது வைத்த நம்பிக்கை என்றும், அனிருத்தின் நெகிழ்ச்சி எனவும், ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X