தனுஷின் டி 43 ... ஐதராபாத்தில் மீண்டும் துவங்கிய ஷுட்டிங்

ஐதராபாத் : துருவங்கள் பதினாறு என்ற த்ரில்லர் படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், தற்போது தனுஷை ஹீரோவாக வைத்து இயக்கி வரும் படம் டி 43. இதுவும் ஒரு க்ரைம் த்ரில்லர் கதை தானாம்.

Recommended Video

Dhanush Unknown Facts | இதலான் பார்த்த Dhanushகு பயமாம் | Dhanush Biography

டிஜி தியாகராஜன் தயாரிக்கும் டி 43 படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய ரோல் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மீண்டும் துவங்கிய டி 43

மீண்டும் துவங்கிய டி 43

இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா, ஹாலிவுட் படப்பிடிப்பிற்காக தனுஷ் அமெரிக்கா சென்றது போன்ற காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

விமர்சிக்கப்பட்ட ஜகமே தந்திரம்

விமர்சிக்கப்பட்ட ஜகமே தந்திரம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் கடைசியாக நடித்த ஜகமே தந்திரம் படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்சில் வெளியிடப்பட்டது. காமெடி கலந்த கேங்ஸ்டர் படமாக இது நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்றது.

தமிழக அரசியல் படத்தில் தனுஷ்

தமிழக அரசியல் படத்தில் தனுஷ்

இன்னும் பெயரிடப்படாத டி 43 படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராக உள்ள படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படம் தமிழக அரசியலை மையமாக வைத்து எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

வரிசைகட்டும் படங்கள்

வரிசைகட்டும் படங்கள்

இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் வேலைகள் துவக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லுரி இயக்கும் தமிழ் - தெலுங்கு மொழிகளில் உருவாகும் மற்றொரு படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படம் இதுவரை முடிவாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X