அசர வேகத்தில் ரெடியாகும் தனுஷ் படங்கள்...டி 44 ஷுட்டிங் துவங்குவது எப்போ ?

சென்னை : இந்திய அளவில் டாப் ஹீரோவாக இருக்கும் தனுஷ், சமீபத்தில் தான் தான் நடிக்கும் ஹாலிவுட் படமான தி கிரேமேன் படத்தின் ஷுட்டிங்கை நிறைவு செய்தார். இந்தியா திரும்பிய கையோடு கார்த்திக் நரேன் இயக்கும் டி 43 படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

டி 43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழு மூச்சாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்தியில் தனுஷ் நடித்த படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதைத் தொடர்ந்து தெலுங்கிலும் தனுஷ் அறிமுகமாகும் படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

4 வது முறையாக கூட்டணி

4 வது முறையாக கூட்டணி

இந்நிலையில் டைரக்டர் மித்ரன் ஜவஹர் இயக்கும் டி 44 படத்தில் நடிக்க தயாராகி விட்டார் தனுஷ். யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களைத் தொடர்ந்து மித்ரனுடன் நான்காவது முறையாக தனுஷ் கூட்டணி அமைக்கும் படம் இது. இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கன்னாவும் பிரியா பவானி சங்கரும் நடிக்கிறார்கள்.

எப்போ துவங்குது ஷுட்டிங்

எப்போ துவங்குது ஷுட்டிங்

டி 44 படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் 6 ம் தேதி பூஜையுடன் துவங்கப்பட உள்ளது. இந்த படம் இரண்டு காலகட்டங்களில் நடப்பதாக எடுக்கப்பட உள்ளதாம். ஒன்று கல்லூரி நாட்களில் நடப்பதாகவும், மற்றொன்று முதிர் பருவத்தில் உள்ளதை போன்றும் எடுக்கப்பட உள்ளதாம். இரண்டு காலகட்டங்களிலும் ஏற்படும் காதலை சொல்வதாக படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

இரண்டு ஹீரோயின்கள்

இரண்டு ஹீரோயின்கள்

கல்லூரி கால காதல், வாழ்க்கையில் பிற்பகுதியில் வரும் காதல் என இரண்டாக தனுஷின் கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளதால் ஹீரோயினாக நடிக்க ராஷி மற்றும் பிரியாவை படக்குழு தேர்வு செய்ததாம். ஆனால் எந்த கால கட்ட ஹீரோயினாக யார் நடிக்க போகிறார் என்பது சரியாக தெரியவில்லை.

இவர் தான் முதலில் நடிக்கிறாரா

இவர் தான் முதலில் நடிக்கிறாரா

ஆனால் தனுஷுடன் ராஷி கன்னா நடிக்க போகும் காட்சிகள் தான் முதலில் படமாக்கப்பட உள்ளதாம். பிறகு தான் பிரியா நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம். அனேகமாக பிரியா நடிக்கும் காட்சிகள் செப்டம்பரில் தான் படமாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ரெண்டு பேருமே பிஸி

ரெண்டு பேருமே பிஸி

ராஷி கன்னா தற்போது கார்த்தியுடன் சர்தார், ஜீவாவுடன் மேதாவி போன்ற தமிழ் படங்களிலும், தெலுங்கில் பக்கா கமர்ஷியல் மற்றும் தேங்க் யூ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். பிரியாவும் சமீபத்தில் தான் அருண் விஜய்யை வைத்து ஹரி இயக்கும் ஏவி 33 ஷுட்டிங்கை துவக்கினார். அத்துடன் லாரன்ஸ் உடன் ருத்ரன் படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் சிம்பு நடிக்கும் பத்து தல படத்திலும் நடிக்க உள்ளார்.

மீண்டும் தனுஷ் படத்தில் அனிருத்

மீண்டும் தனுஷ் படத்தில் அனிருத்

தனுஷ், ராஷி கன்னா, பிரியா பவானிசங்கர் மூவருமே வேறு வேறு படங்களில் இருக்கும் சமயத்தில் டி 44 படத்தின் ஷுட்டிங்கையும் ஆகஸ்ட் 6 ல் துவக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு இசையமைக்க போகிறார் அனிருத். கடைசியாக தனுஷ் நடித்த மாரி படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X