Dhanush: தனுஷின் D 50 படத்தில் இப்படியொரு சம்பவமா... கொக்கி குமார் ஃபேன்ஸ் ரெடியா..?

சென்னை: தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதம் மட்டுமே நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ், தனது 50வது படத்திற்கு கதை எழுதி வருகிறாராம்.

இந்தப் படம் தனுஷ் ரசிகர்களே எதிர்பார்க்காத ஒரு தரமான சம்பவமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

தனுஷின் D 50 அப்டேட்
அடுத்தடுத்து வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம், வாத்தி திரைப்படங்கள் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தது. இதனால், தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படம் பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகிறது. கேப்டன் மில்லர் வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இந்தப் படம் குறுகிய காலத்தில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மாரி செல்வராஜ் படம், D 50, வட சென்னை 2 என பல படங்கள் தனுஷின் லைன்-அப்பில் வரவிருக்கின்றன. முக்கியமாக தனுஷின் D 50 படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தனுஷே இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் D 50 மல்டி ஸ்டார்ஸ் படமாக இருக்கும் என்றும், விஷ்ணு விஷால் உள்ளிட்ட மேலும் சிலர் தனுஷுடன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேப்டன் மில்லர் ரிலீஸ் தேதி உறுதியான பின்னர் தான் D 50 படத்தின் அடுத்த அப்டேட்களை வெளியிட தனுஷ் திட்டமிட்டுள்ளாராம்.

தனுஷ் இயக்கவுள்ள இந்தப் படம் கேங்ஸ்டர் ட்ராமா ஜானரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் கேரியரில் அவர் நடித்த புதுப்பேட்டை இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது. இந்தப் படத்தில் கொக்கி குமார் என்ற கேரக்டரில் தனுஷ் மிரட்டியிருப்பார். இந்த கேரக்டரை பின்னணியாக வைத்தே D 50 படம் உருவாகவுள்ளதாம். இதுகுறித்து ஏற்கனவே தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 Dhanushs D 50 is said to be the second part of Pudhupettai

ஏற்கனவே புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வருகின்றனர். ஆனால், செல்வராகவனோ ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் வரும், அதில் தனுஷ் ஹீரோவாக நடிப்பார் எனக் கூறி வருகிறார். அதனால், புதுப்பேட்டை 2ம் பாகத்தை தனுஷே இயக்க முடிவெடுத்துவிட்டாராம். புதுப்பேட்டை 2 அல்லது கொக்கி குமார் என்ற டைட்டிலில் D 50 உருவாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.

 Dhanushs D 50 is said to be the second part of Pudhupettai

D 50 படத்தின் கதை, திரைக்கதையில் செல்வராகவனும் தனுஷுக்கு சப்போர்ட் செய்து வருகிறாராம். தனது 50வது படம் என்பதால் தரமான ஹிட் கொடுக்க வேண்டும் என தனுஷும் ரொம்பவே கேர் எடுத்து வருகிறார். முன்னதாக இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் கமிட் ஆகிவிட்டு, பின்னர் முடியாது என தனுஷிடம் கூறிவிட்டதாக தெரிகிறது. அதனால், சந்தோஷ் நாராயணன் அல்லது ஜிவி பிரகாஷ் இவர்களில் யாரேனும் இந்தப் படத்திற்கு இசையமைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X