க்ளைமேக்ஸை நெருங்கும் டி 43...ஐதராபாத் செல்லும் படக்குழு
சென்னை : ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புகளை முடித்து சமீபத்தில் தான் அமெரிக்காவில் இருந்து திரும்பி உள்ளார் தனுஷ். அடுத்தபடியாக கார்த்திக் நரேன் இயக்கும் டி 43 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
டிஜி தியாகராஜன் தயாரிக்கும் இந்த எமோஷனல், ஆக்ஷன் படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. தனுஷ் அமெரிக்காவில் இருந்து திரும்புவதற்கு முன்பே பெரும்பாலான காட்சிகளை எடுத்து முடித்து விட்டனர். தற்போது தனுஷை வைத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

ஐதராபாத் செல்லும் டி 43 டீம்
லாக்டவுனிற்கு பிறகு படப்பிடிப்புக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஜுலை 1 முதல் ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கள் நடத்தப்பட உள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளிட்ட முக்கிய காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு மாத ஷுட்டிங்
அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாம். தனுஷுடன், சமுத்திரக்கனி, மாளவிகா மோகனன், ஸ்ருதி வெங்கட், மகேந்திரன் உள்ளிட்டோரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளனர். சில முக்கிய காட்சிகள் ஐதராபாத் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் எடுக்கப்பட உள்ளதாம்.

கடும் கட்டுப்பாடுகள்
ஐதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்புடன் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைய உள்ளது. படப்பிடிப்பின் போது கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட உள்ளதாம்.

தடுப்பூசி போட்டா தான் அனுமதி
இதற்காக மே முதல் வாரத்தில் இருந்தே படக்குழுவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனவாம். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்களாம்.

மாஸ்க் கட்டாயம்
படக்குழுவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டுமாம். படப்பிடிப்பு நடக்கும் இடம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தொடர்ந்து சுத்தப்படுத்தப்பட்டு வருகிறதாம். இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











