துவம்சம் செய்யும் தனுஷ்.. வெளியானது டி43 ஃபர்ஸ்ட் லுக்.. டைட்டில் இதுதான்!
சென்னை: தனுஷ் நடிக்கும் 43வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.
துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன். இவர் தற்போது தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

காலை 11 மணிக்கு அப்டேட்
இன்று நடிகர் தனுஷின் பிறந்தநாள் என்பதால் காலை 11 மணிக்கு 'டி43' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அப்படத்தின் தலைப்பும் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில் சொன்னப்படியே காலை 11 மணிக்கு படத்தின் அப்டேட் வெளியானது. அதன்படி தனுஷ் நடிக்கும் 43வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

அடித்து நொறுக்கும் தனுஷ்
படத்திற்கு மாறன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் எதிரியை டேபிளில் கண்ணாடி நொறுங்கும் அளவுக்கு அடித்து நொறுக்குகிறார் தனுஷ். உடைந்த கண்ணாடிகளில் தனுஷ் முகம் தெரிகிறது.
Recommended Video

ஜிவி பிரகாஷ் இசை
டேபிள் முழுக்க செஸ் காயின்கள் சிதறிக் கிடக்கின்றனர். இப்படியாக உள்ளது மாறன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.


Click it and Unblock the Notifications











