தனுஷ்க்காக மட்டும்தான் வெயிட்டிங்... வந்தா ஆரம்பிச்சுட வேண்டியதுதான்
சென்னை : நடிகர் தனுஷின் டி43 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் எடுக்கப்பட்டுவரும் இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை துவக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படப்பிடிப்பில் நடித்துவரும் தனுஷ் அதற்காக லாஸ் ஏஞ்சல்சில் தன்னுடைய குடும்பத்தினருடன் உள்ளார்.

லாஸ் ஏஞ்சல்சில் தனுஷ்
நடிகர் தனுஷ் வித்தியாசமான கதைக்களத்துடன் கூடிய படங்களில் நடிப்பதில் ஆர்வத்துடன் உள்ளார். பாலிவுட் முதல் ஹாலிவுட் வரையிலும் நடித்து வருகிறார். தற்போது தி க்ரே மேன் ஹாலிவுட் படத்திற்காக லாஸ் ஏஞ்சல்சில் குடும்பத்தினருடன் உள்ளார். அங்கு படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

கார்த்திக் நரேன் இயக்கம்
மேலும் அவரது மாமனாரின் ஹெல்த் செக்-அப் அமெரிக்காவில் நடைபெறவுள்ளதால் ஜூலை மாத இறுதியில் தான் அவர் சென்னை வரவுள்ளார். இந்நிலையில் அவரது வருகைக்காக அவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துவரும் டி43 படக்குழுவினரும் காத்திருக்கின்றனர்.

தனுஷ் திரும்பியவுடன் பெயர்
இந்த படத்தில் மாளவிகா மோகனன், மகேந்திரன், சமுத்திரகனி உள்ளிட்டவர்களும் இணைந்துள்ள நிலையில், இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பெயர், தனுஷ் லாஸ் ஏஞ்சல்சில் இருந்து திரும்பியவுடன் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சத்திய ஜோதி பில்ம்ஸ் தயாரித்து வருகிறது.

தனுஷ்க்காக வெயிட்டிங்
மேலும் தனுஷ் சென்னை திரும்பியவுடன் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்றும் இயக்குநர் கார்த்திக் நரேன் அறிவித்துள்ளார். அதற்குள் கொரோனா பாதிப்பும் கட்டுக்குள் வரும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அப்படி இல்லையென்றாலும் குறைவான ஆட்களுடன் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தனுஷ், மகேந்திரன் காட்சிகள்
தனுஷின் 43வது திரைப்படமான இதில் அவர் புலனாய்வு பத்திரிகையாளராக நடித்து வருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதத்தில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், தற்போது தனுஷின் வருகைக்காக படக்குழு காத்திருக்கிறது. இரண்டாவது ஷெட்யூலில் நடிகர் மகேந்திரன், தனுஷ் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











