நானும் ஹீரோ தான்...வைரலாகும் தனுஷின் ஹார்ட் டச்சிங் தந்தையர் தின பதிவு

சென்னை : டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ், நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர், எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பல முகங்களைக் கொண்டவர்.

2002 ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தனுஷ், தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் நடித்த ஜகமே தந்திரம் படம் 2 நாட்களுக்கு முன் ஓடிடி.,யில் வெளியிடப்பட்டு, வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

பல மொழிகளில் டாப்

பல மொழிகளில் டாப்

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளிலும் பிரபலமான நடிகராக இருக்கும் தனுஷ், 2004 ம் ஆண்டு ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்திரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.

வைரலாகும் தந்தையர் தின பதிவு

வைரலாகும் தந்தையர் தின பதிவு

இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகன்களுடன் கடலில் பயணம் செய்வது போன்ற ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த ஃபோட்டோவை தனுஷ் பதிவிட்ட ஒரு மணி நேரத்திலேயே 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.

Recommended Video

Jagame Thandhiram | Poster Pakiri Review | Filmibeat Tamil
நானும் ஹீரோ தான்

நானும் ஹீரோ தான்

இந்த ஃபோட்டோவுடன் தனுஷ் பதிவிட்டுள்ள கேப்ஷனில், ஹேப்பி ஃபாதர்ஸ் டே. ஒரு குழந்தையின் முதல் ஹீரோ. அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு தெரியும். லவ் யூ குழந்தைகளே. எனது உலகத்தை அர்த்தமுள்ளதாக்கியவர்கள் நீங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 3 ஆண்டுகளுக்கு தனுஷ் பிஸி

3 ஆண்டுகளுக்கு தனுஷ் பிஸி


தனுஷின் இந்த பதிவை பாராட்டி ஏராளமானோர் கமெண்ட் செய்துள்ளனர். தான் நடித்த தி கிரேமேன் ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், லாக்டவுன் முடிந்ததும் டி 43 படத்தில் நடிக்க உள்ளார். அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி இருப்பதால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தனுஷ் பிஸியாக இருப்பார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X