twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் ஹீரோவாக கடன் வாங்குனீங்க...நீங்க தான் அப்பா என் ஹீரோ...மேடையில் உருகிய தனுஷ்

    |

    சென்னை : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டைரக்டர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள படம் திருச்சிற்றம்பலம். தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்டு 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். பாரதிராஜா தனுஷின் தாத்தாவாகவும், பிரகாஷ்ராஜ் தனுஷிற்கு அப்பாவாகவும் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஆடியோ விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபலங்கள் பேசிய பல வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.

    “சினிமாவில் நிறைய அனுபவங்கள் பார்த்தாச்சு”: தீடீர்ன்னு எல்லாருக்கும் நன்றி சொன்ன நாக சைத்தன்யா “சினிமாவில் நிறைய அனுபவங்கள் பார்த்தாச்சு”: தீடீர்ன்னு எல்லாருக்கும் நன்றி சொன்ன நாக சைத்தன்யா

    தனுஷ் - சிவகார்த்திகேயன் நட்பு

    தனுஷ் - சிவகார்த்திகேயன் நட்பு

    விழாவில் டைரக்டர் வெற்றிமாறன், தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையேயான நட்பு பற்றி ஓப்பனாக சொன்னார். சிவகார்த்திகேயனுக்காக கதை சொல்ல சொல்லி தனுஷ் கேட்டதாகவும், சிவகார்த்திகேயனுக்கு சூப்பர்ஸ்டார் ஆகும் அளவிற்கு திறமையும், தகுதியும் உள்ளதாக சொன்னதாகவும் பேசிய வீடியோ தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    ரசிகர்கள் தான் என் வாழ்க்கை

    ரசிகர்கள் தான் என் வாழ்க்கை

    தனுஷ் பேசுகையில், எல்லா சூழலிலும் ரசிகர்கள் தான் எனக்கு துணையாக நின்றுள்ளனர். அந்த நன்றியை எப்போதும் நான் மறக்க மாட்டேன். எண்ணம் போல் தான் வாழ்க்கை. எனது எண்ணம் என் ரசிகர்கள். அவர்கள் தான் என்னுடைய வாழ்க்கை என பேசிய வீடியோ க்ளிப்பிங் செம டிரெண்டானது.

    அப்பா பற்றிய பேசிய தனுஷ்

    அப்பா பற்றிய பேசிய தனுஷ்

    தொடர்ந்து பேசிய தனுஷ், இயக்குனர் மித்ரன் ஜவகர் இந்த திரைப்படம் விஐபி மற்றும் யாரடி நீ மோகினி இரண்டும் கலந்த ஒரு ஃபிளேவரில் இருக்கும் என்று கூறியிருந்தார். எத்தனையோ மேடைகளில் என்னுடைய தாயார் பற்றி பேசி இருக்கிறேன். இந்த மேடையில் என்னுடைய தந்தை பற்றி பேசினால் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லை

    ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லை

    ஒரு குக்கிராமத்தில் இருந்து நான்கு குழந்தைகளுடன் சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தவர். மனைவி மட்டுமே உறுதுணை.வறுமை, கஷ்டம், பஞ்சம், பசி... எந்தெந்த வேலையோ செய்து ஒருவேளை உணவாவது குழந்தைகளுக்கு கொடுத்து விட வேண்டும் என்று நினைத்த ஒரு மனிதர்.சிறிதாக சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்து.

    அந்த 4வது குழந்தை...

    அந்த 4வது குழந்தை...

    அதன் மூலம் கிடைத்ததை வைத்து, தான் அனுபவிக்காமல் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்தவர் பிள்ளைகளின் நலனுக்காகவே யோசித்தார். அந்த 4 குழந்தைகளுள் ஒரு குழந்தை முதலில் என்ஜினியராகவும் பிறகு இயக்குனராகவும், இரண்டு பெண் குழந்தைகள் டாக்டர்களாகவும், அந்த நான்காவது குழந்தை.... என தனுஷ் நிறுத்தியதும், தனுஷ் தான் அந்த 4வது குழந்தை என்பதை புரிந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

    நீங்க தான் அப்பா என் ஹீரோ

    நீங்க தான் அப்பா என் ஹீரோ

    தனது தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜாவை பார்த்து, அப்பா நான் ஹீரோ ஆக வேண்டும் என்பதற்காக, நீங்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கும், பத்தாயிரம் ரூபாய்க்கும் வட்டிக்கு பணம் வாங்க இரவு பகலாக வண்டியில் அலைந்து முயற்சித்தது என அத்தனையும் நான் மறக்க மாட்டேன்... நீங்கள் தான் என் ஹீரோ அப்பா என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் தனுஷ்.

    English summary
    Dhanush's emotional speech in Thiruchitrambalam audio launch event becomes trending in social media. He told that his father Kasthuri Raja face lots struggles and roaring to get loan for making his as hero. Dhanush said that his father was his hero.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X