Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- News
பிரார்த்தனையில் மூழ்கிய பெண்.. பின்னாலிருந்து திடீரென.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதகர் கைது
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Automobiles
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க பாசத்துக்கு அளவே இல்லையாடா...நடுக்கடலில் ‘கர்ணன்‘ கட்அவுட் … அசத்திய தனுஷ் ரசிகர்கள் !
சென்னை : தனுஷின் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் நாளை வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரி ரசிகர்கள் நடுக்கடலில் கட் அவுட் வைத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இத்திரைப்படத்தின் மூலம் மலையான நடிகையான ரஜிஷா முதன் முறையாக தமிழில் அறிமுகமாகியுள்ளார் .
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மொத்தம் 4 பாடல்கள் அந்த நான்கு பாடல்களும் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றுள்ளன.

எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் மாரிசெல்வராஜ். இவரின் அடுத்தப்படமான கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பரியேறும் பெருமாள் திரைப்படம் பல விருதுகளை பெற்றதால் கர்ணன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

தமிழில் அறிமுகம்
இத்திரைப்படத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன் மற்றும் 96 புகழ் கௌரி கிஷன் ,லட்சுமி பிரியா சந்திரமௌலி, லால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து உள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
|
நடுக்கடலில் கட் அவுட்
இந்நிலையில், கர்ணன் நாளை வெளியாவதால் தனுஷின் தீவிர புதுச்சேரி ரசிகர்கள் நடுக்கடலில் படகில் சென்று கர்ணன் கட் அவுட்டை வைத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

நாளை ரிலீஸ்
அதே நேரத்தில், கொரோனா பரவல் காரணமாக தமிழக தியேட்டர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து 50 சதவீகித இருக்கையுடன் மட்டுமே செயல் பட அனுமதி அளித்துள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் நாளை கர்ணன் திரைப்படம் வெளியாகுமா என்ற அச்சத்தில் இருந்தனர். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு திட்டமிட்டடபடி நாளை கர்ணன் திரைப்படம் வெளியாகும் என்று கூறியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.