ஷமிதாப்.. அசத்தலான தோற்றத்தில் அமிதாப்புடன் தனுஷ்!
ஷமிதாப் படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் அமிதாப்புடன் தனுஷ் தோன்றும் ஒரு படம் பலராலும் பாராட்டப்படுகிறது.
செம ஸ்டைல் எனும் அளவுக்கு தனுஷின் தோற்றம் உள்ளதாக பாலிவுட்டே வியக்கிறது.
பால்கி இயக்க, அமிதாப் -தனுஷ் - அக்ஷரா நடிக்கும் படம் ஷமிதாப்.

இளையராஜா
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படம் தற்போது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

பாடல்
இப்படத்திற்காக தனுஷும் அக்ஷரா ஹாசனும் இணைந்து ஆடிய பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. தனுஷும், அமிதாப்பச்சனும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்கள்.

புது கெட்டப்
தனுஷ் தாடியுடனும், ஸ்டைலான தலைமுடியுடனும் வருகிறார். அமிதாப்பச்சனும் நரைத்த தாடி, பெரிய மீசையுடன் தோன்றுகிறார். இவர்களின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

படங்கள்
குறிப்பாக, தனுஷ், மூன்று பிரம்மாண்ட கேமராக்களுக்கு நடுவே கோட் சூட்டுடன், கூலிங் கிளாஸ் அணிந்து நிற்கும் காட்சி இன்னும் அசத்தலாக உள்ளது.

எதிர்ப்பார்ப்பு
தனுஷ் நடித்த முதல் இந்திப்படம் ராஞ்ஜனா பெரும் வெற்றி பெற்றதால், இந்தப் படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











