தனுஷின் வளர்ச்சி அபாரமானது.. பி வாசு பெருமிதம்
சென்னை : தனுஷின் வளர்ச்சி அபாரமானது அவரின் நடிப்பு பாராட்டக்கூடியது என்று பி வாசு பெருமிதத்துடன் ஒரு பேட்டியில் கூறினார்
இயக்குனர் பி.வாசு 80களில் துவங்கி தற்போது வரை பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர். இவர் கடைசியாக ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது மகன் சக்தியை வைத்து சிவலிங்கா படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ஓரளவு வெற்றி படமாக அமைந்தது. தற்போது இவர் நேர்காணல்களில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் .

அதில் இன்றை இணைய விமர்சகர்கள் படங்களின் வெற்றியை தடுக்கிறார்கள் என்று கூறினார். அதற்கு எடுத்து காட்டாக தனது படம் சின்னதம்பி தற்போது வெளியாகி இருந்தால் பிரபு என்னதான் படத்தில் வெள்ளந்தி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் ஒரு தாலியை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறி இது லாஜிக் இல்லாத விசயம் என்று கூறி படத்தை தோல்வி அடைய வைத்து விட்டிருப்பார்கள் என்று கூறினார் .
மேலும் சமீபத்தில் நான் பார்த்திபன் எடுத்த ஒத்த செருப்பு படத்தின் முன்னோட்டத்தை பார்த்து விட்டு நீங்கள் ஒருத்தர் மட்டும் தான் படத்தில் நடிச்சிருக்கீங்க நீங்க சொன்ன படி படம் இருக்குமா என்று கேட்டேன் அதற்கு பார்த்திபன் நீங்க படத்தை பாருங்கள் கண்டிப்பாக இருக்கும் என்று சொன்னார் அதே போல ஒத்த செருப்பு பிரம்மிப்பாய் இருந்தது என்று கூறினார் .

பி.வாசுவின் மகன் சக்தி பற்றிய கேள்விக்கு என் மகனை வைத்து படம் இயக்க எனக்கும் ஆசை ஆனால் தந்தை தான் மகனை சினிமாவில் கைபிடித்து தூக்கி விட்டார் என்ற பேச்சு வந்து விடும் என்று தான் விட்டுவிட்டேன் இருந்தும் பல கதைகளை கேட்டு வருகிறேன் அல்லது வேறு இயக்குனர்களை வைத்தாவது படம் இயக்க ஆசை உள்ளது என கூறினார் .
பல இயக்குனர்கள் தனது மகனை ஹீரோக்கள் ஆக்க முயற்சி செய்து தோற்று இருக்கிறார்கள். அதில் தப்பியது விஜய் மற்றும் தனுஷ் தான். தனுஷ் அப்பா மற்றும் அண்ணன் இருவரும் இயக்குனர் அதனை தாண்டி தனுஷ் தற்போது வளர்ந்திருப்பது மிகவும் அபாரமானது என்று கூறினார். மேலும் அவரின் நடிப்பு பாராட்டக்கூடியது என்று பி வாசு பெருமிதத்துடன் கூறினார்.
இன்றைய இயக்குனர்களுக்கு குறும்படம் இணையம் என்று பல விசயங்கள் இருக்கிறது அதில் பலர் சாதித்து விடுகின்றனர் சிலர் தோற்று விடுகின்றனர். சமீபத்திய இயக்குனர்கள் சிலரை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன் அதில் மிக முக்கியமானவர் மாரி செல்வராஜ் , பரியேரும் பெருமாள் படம் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று ஆச்சரியத்துடன் கூறினார் பி.வாசு. அடுத்தாக ஐந்து கதைகள் இருக்கிறது கூடிய விரைவில் நல்ல படத்துடன் வருவேன் என்று உறுதி அளித்துள்ளார் .


Click it and Unblock the Notifications











