ஜகமே தந்திரம்… உலக அளவில் ஒரு புதிய சாதனை… தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி !

சென்னை : ஜகமே தந்திரம் திரைப்படம் ஒரு புதிய சாதனையை நிகழ்ந்தி உள்ளதாக நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

ஜகமே தந்திரம் குறித்து பல நெகடிவ் கருத்துக்கள் வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த தகவல்கள் தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 16 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட இப்படம் 190 நாடுகளில் வெளியானது.

இயக்கம்

இயக்கம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வடிவடிவுக்கரசி லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜகமே தந்திரம்'.

ஹிட் பாடல்

ஹிட் பாடல்

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை , ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கார்த்திக் சுப்புராஜ், இப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற முடிவில் நீண்ட நாட்களாக இருந்தார், கொரோனா ஊரடங்கு காரணமாக படம் தியேட்டரில் வெளியிட முடியாத சூழ்நிலை தொடர்ந்து வந்ததால், இப்படம் ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

புதிய சாதனை

புதிய சாதனை

கடந்த 18ந் தேதி ஒடிடியில் வெளியான இப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 16 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட இப்படம் 190 நாடுகளில் வெளியானது. இந்நிலையில், உலக அளவில் அதிகம் பார்வையாளர்களை கொண்ட திரைப்படம் என்ற பெருமை ஜகமே தந்திரம் படத்திற்கு கிடைத்துள்ளது.

டாப் 10 பட்டியலில்

டாப் 10 பட்டியலில்

12 நாடுகளின் நெட்பிளிக்ஸ் டாப் 10 பட்டியலில் இப்படம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு வெளியில் உள்ளவர்களும் இப்படத்தை பார்த்துள்ளதாக நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது. ஜகமே தந்திரம் குறித்து பல நெகடிவ் கருத்துக்கள் வைரலாகி வரும் நிலையில் இந்த தகவல்கள் தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X