தியேட்டர்னு சொன்னாங்க.. மீண்டும் குழப்பத்தில் ஜகமே தந்திரம் ரிலீஸ்.. நெட்பிளிக்ஸில் நேரடியா வருதா?
சென்னை: ஜகம் குணமடைந்த பின்னர் தான் ஜகமே தந்திரம் தியேட்டரில் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது நெட்பிளிக்ஸில் நேரடியாக ஜகமே தந்திரம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.
#JagameThandhiram என்கிற ஹாஷ்டேக்கை போட்டு ஜகமே தந்திரம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் வெகு விரைவாக வெளியாக போவதாக ட்வீட்கள் பறக்கின்றன.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி உள்ளது ஜகமே தந்திரம்.

5 வருஷமாகிடுச்சு
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து படம் பண்ணப் போறேன் என நடிகர் தனுஷ் கடந்த 2016ம் ஆண்டு அறிவித்த ட்வீட்டை எடுத்து போட்டு, கிட்டத்தட்ட 5 வருஷமா ஜகமே தந்திரம் படத்துக்காக காத்திருக்கிறோம். தற்போது ஒடிடி தளத்தில் வெளியிட போறோம் என்றால் என்ன அர்த்தம் என ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

அதிர்ச்சியா இருக்கு
கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஜகமே தந்திரம் படக்குழுவினர் அளித்த எல்லா பேட்டிகளிலும் தியேட்டர் ரிலீஸ் தான் அதுக்குத்தான் ஒரு வருடம் காத்து இருக்கிறோம் எனக் கூறி வந்த நிலையில், தற்போது நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகப் போகிறது என்கிற அறிவிப்பு ரொம்பவே ஷாக்கிங்கா இருக்கு என கமெண்ட்டுகள் தெறிக்கின்றன.

மாஸ்டர் போல
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை போல தியேட்டரில் தனுஷின் ஜகமே தந்திரம் படம் வெளியானால் தான் ரசிகர்களின் கொண்டாட்டங்களும், குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதும் நிகழும். அதற்கு மாறாக ஒடிடியில் வெளியிட்டால் மாஸாக இருக்காது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

கடைசி நம்பிக்கை
ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாக போகிறது என பல இடங்களில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கடைசி நம்பிக்கை தனுஷ் தான் என்றும், அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ, ரசிகர்கள் அதற்கு கட்டுப்படுவார்கள், ஆனால், ரசிகர்களுக்காக முதலில் தியேட்டரில் வெளியிட்டு பின்னர் ஒடிடி தளத்தில் வெளியிடலாம் என்கின்றனர்.

நாளைக்கு கர்ணன்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் வெளியீட்டு தேதி அல்லது டீசர் ரிலீஸ் தேதி நாளை ஜனவரி 31ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஜகமே தந்திரம் படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு உடனடியாக வெளியிட வேண்டும். நடிகர் தனுஷ் அல்லது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தியேட்டரிலா? ஒடிடியிலா? என்பதை அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

அதுதான் காரணமா
நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் கிரேமேன் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். அதன் காரணமாகத்தான் தற்போது தனுஷின் ஜகமே தந்திரம் படத்தை ஒடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்ய உள்ளார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











