‘கர’னு ஒரு பெயரா.. ஆச்சரியமா இருந்தது.. இயக்குநர் விக்னேஷ் ராஜே இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் குபேரா, தேரே இஷ்க் மெய்ன், இட்லி கடை ஆகிய படங்கள் வந்தன. மூன்று படங்களில் இட்லி கடை மற்றும் சூப்பர் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் சூழலில்; படத்தின் டைட்டில் குறித்து இயக்குநர் பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் தனுஷ். அவர் சினிமாவுக்குள் வந்தபோது பலர் அவரை கிண்டல் செய்தார்கள். இப்போது அவருடைய வளர்ச்சியை பார்த்து அவர்கள் வாயடைத்து போயிருக்கிறார்கள். நடிப்பு மட்டுமின்றி பாடல்கள் பாடுவது, எழுதுவது என இருந்த அவர்; பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இப்படி படு பிஸியாக இருக்கும் அவரை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள்.

படுதோல்வி படம்: தனுஷுக்கு கடந்த சில வருடங்களாகவே பெரிய ஹிட் எதுவும் இல்லை. அந்தப் படத்துக்கு பிறகு இட்லி கடை படத்தை இயக்கி நடித்தார். இட்லி கடை அவருக்கு நல்ல வசூலை கொடுத்தது. அதற்கு பிறகு ஹிந்தியில் தேரே இஷ்க் மெய்ன் ரிலீஸானது. இட்லி கடை கொடுத்த வெற்றி தேரே இஷ்க் மெய்ன் படத்திலும் வரும் என்றுதான் எதிர்பார்த்திருந்தார்கள் அவரும் அவரது ரசிகர்களும். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது.
எல்லாம் சுமார் ரகம்தான்: ஹைதர் அலி கால காதல் கதையை எடுத்ததுகூட பரவாயில்லை; அதை கொஞ்சமாவது பட்டி டிங்கரிங் பார்க்காமல் பழையபடியே எடுத்த ஆனந்த் எல்.ராய் ரொம்பவே ஏமாற்றிவிட்டார் என்று படம் பார்த்த ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடித்த குபேராவும் சுமார் ரகம்தான்.
போர்த்தொழில் இயக்குநருடன்: இதற்கிடையே தமிழில் அவர் கைவசம் ஏராளமான படங்கள் இருக்கின்றன. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமின்றி போர்த்தொழில் படத்தை இயக்கி பெரிய கவனத்தை ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் கர படத்தில் நடிக்க கமிட்டானார். போர்த்தொழில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால் இந்தக் கூட்டணி பற்றிய அறிவிப்பு வந்ததுமே ஓவர் ஹைப் ஏறியது.
நாளை ரிலீஸ்: கண்டிப்பாக இந்தப் படம் தனுஷின் கரியரில் முக்கியமான ஒரு இடத்தை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொடுக்கும் பணத்துக்கு இந்தப் படம் வொர்த்தாக இருக்கும் எனவும் இயக்குநர் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் பெயர் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "என் பெயர் கோபால் என்னை கோபால் என படத்தின் பெயர் வந்தபோது எல்லோரும் மீம்ஸ்களை போட்டார்கள். உண்மையிலேயே எனக்கு தெரிந்த ஒருவரின் பெயர் கரசாமி.
கர என்று கூப்பிடுவார்கள்: அவரை கர என்றுதான் அழைப்பார்கள். அதை கேட்கும்போதெல்லாம் கரனு ஒரு பெயரா என்றுதான் எனக்கும் ஆச்சரியமாக தோன்றும். அது போக கரசாமி என்ற குல தெய்வமும் இருக்கிறது. அதேபோல் படத்தில் அவர் நெகட்டிவ் ரோல் செய்திருக்கிறார். கர என்று சொல்லும்போது அவர் கறை படிந்தவர் என்று சொல்லவும் நன்றாக இருந்தது என இதை வைத்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
