குரல் அற்றவரின் குரலாக.. கர்ணனின் குரல் உலகமெங்கும் எதிரொலிக்க வருகிறான் #KarnanFirstLook
சென்னை: தனுஷின் கர்ணன் ஃபர்ஸ்ட் லுக் தியேட்டர் ரிலீஸ் தேதியுடன் தற்போது வெளியாகி உள்ளது.
கர்ணன் ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து #KarnanFirstLook என்கிற ஹாஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இயக்குநர் மாரி செல்வராஜை மனதார பாராட்டி இயக்குநர் பா. ரஞ்சித் போட்டுள்ள ட்வீட்டும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தியேட்டரில் வெளியாகும் தேதி
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாகிறது. தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் தனுஷ், தியேட்டர் ரிலீஸ் தேதி என குறிப்பிட்டு போட்டுள்ளார். ஜகமே தந்திரம் தியேட்டரில் வெளியாகுமா? ஒடிடியிலா? என்கிற குழப்பத்தில் இருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை அளித்துள்ளது.

குரல் அற்றவர்களின் குரலாக
கை விலங்குப் போட்டு தலையில் ரத்தம் சொட்ட சொட்ட தனுஷ் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தாலே ஏதோ பெரிய சம்பவம் செய்திருப்பார் போலவே தெரிகிறது. குரல் அற்றவர்களின் குரல்களாக கர்ணனின் குரல் உலகமெங்கும் வரும் ஏப்ரல் 9ம் தேதி ஒலிக்கும் என அவரது ரசிகர்கள் #KarnanFirstLook ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நீதியின் ஆன்மா
பெரிய சம்பவம் இருக்கு.. கர்ணன் நீதியின் ஆன்மா வெல்லும் என ஏகப்பட்ட தனுஷ் ரசிகர்கள் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். தனுஷ் உடன் இணைந்து இந்த படத்தில் மலையாள நடிகையாக ரஜிஷா விஜயன், கெளரி கிஷன், நடிகர் லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தலைவா வெறித்தனம்
கர்ணன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கையோடு நடிகர் தனுஷ் தி கிரே மேன் ஷூட்டிங்கிற்காக ஹாலிவுட் சென்றுள்ளார். அங்கிருந்தபடியே தற்போது ட்விட்டரில் கர்ணன் ஃபர்ஸ்ட் லுக்கை ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த இந்த நெட்டிசன் தலைவா வெறித்தனம் யா என தெறி கமெண்ட் போட்டுள்ளார்.

யாரெல்லாம் கவனிச்சீங்க
சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்களும், தனுஷ் ரசிகர்களும் நட்பாகவே பழகி வருகின்றனர். கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், யாரெல்லாம் கவனிச்சீங்க, கடந்த ஆண்டு மாஸ்டர் திரைப்படம் இந்த தேதியில் தான் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி வெளியானது என விஜய் ரசிகர்களும் கர்ணனை கொண்டாடி வருகின்றனர்.

இம்ப்ரெஸிவ் டா
இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்த இயக்குநர் பா. ரஞ்சித், கர்ணன் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த பின்னர், இம்ப்ரெஸிவ் போஸ்டர் டா என மனதார மாரி செல்வராஜ் மற்றும் கர்ணன் படக்குழுவினரை பாராட்டி பதிவிட்டுள்ள வாழ்த்து ட்வீட்டும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











