ஒரு பக்கம் பாராட்டு.. ஒரு பக்கம் திட்டு.. கலவையான விமர்சனங்களை பெறும் 'கர்ணன்'!
சென்னை:தனுஷின் கர்ணன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் கர்ணன். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்தப் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
நாளை முதல் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கர்ணன் திரைப்படம் வெளியானது.

கலவை விமர்சனம்
இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் கர்ணன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தியேட்டர்ல பாருங்க..
படத்தை பார்த்த இந்த ரசிகர், கர்ணன் வாளெடுத்து சண்ட போடுற ஒரு சீன் தனுஷ் மிரட்டிருக்காப்டி. இப்ப சொன்னா ஸ்பாய்ல் ஆகிடும், நீங்க தியேட்டர்ல பாருங்க என பதிவிட்டுள்ளார்.

எஃபெக்ட் இருக்கும்
மற்றொரு நெட்டிசனான இவர், தனுஷ் அந்த வாள வச்சுட்டு வர சீன்ஸ்லாம் அப்படி இருக்கும். எப்படின்னு சொன்னா ஸ்பாய்ல் ஆயிரும். தியேட்டர்ல பாத்தா தான் அந்த எஃபெக்ட் இருக்கும். கூஸ்பம்ஸ் என பதிவிட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பு வெறித்தனம்
படத்தை பார்த்த இந்த ரசிகர், கர்ணன் படத்தில தனுஷ் நடிப்பு வெறித்தனம். இப்படியெல்லாம் எப்படி தத்ரூபமா நடிக்க முடியும்னு பிரமிச்சு போய்ட்டேன். அதுவும் க்ளைமாக்ஸ்ல வர பாட்டுல அவரோட ஆக்டிங்.. என பாராட்டியுள்ளார்.

வளர்த்துவிட வேண்டியது
பலரும் பாஸிட்டிவான கமெண்ட்டுகளை பதிவு செய்து வரும் நிலையில் சிலர் நெகட்டிவ் கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ரசிகர் படம் முழுக்க ஜாதி ஜாதி ஜாதி தான்! ஜாதிய ஒழிக்குறேன்னு சினிமாக்கு வர வேண்டியது, வந்த அப்புறம் வளர்த்துவிட வேண்டியது என விளாசியிருக்கிறார்.

அழுத்தமான படம்
மற்றொரு நெட்டிசனான இவர், கர்ணன் படம் குறித்து பதிவிட்டிருப்பதாவது, புரையோடிப்போன சாதிய அடுக்குகளை செல்லூலாயிடில் பதிவு செய்திருக்கும் அழுத்தமான படம்.
ஏமராஜாவும் மாடத்திகளும் அதனுடைய நீட்சி.
சாதிகளை களைவதென்பது இப்படியோர் புறப்பாட்டில்தான் சாத்தியப்படும். கர்ணன் கவசங்களின்றியும் வீரன் என புகழ்ந்துள்ளார்.

ஆடியன்ஸ சாவடிக்கிறாங்க
படத்தை பார்த்த இந்த நெட்டிசன், பழைய கர்ணன்ல சிவாஜிய சாவடிப்பாங்க.. புது கர்ணன்ல தனுஷ் ஆடியன்ஸ சாவடிக்கிறார் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











