Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்…
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Automobiles
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தெரிஞ்சா தகவல் சொல்லுங்க.. 50% இருக்கைதான்... கர்ணன் வெளியாவதில் ஆபத்தா... டென்ஷனில் ரசிகர்கள்!
சென்னை : தனுஷின் கர்ணன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தியேட்டர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
திரையரங்குகள் 50 சதவீகித இருக்கைகளுடன் மட்டுமே செயல் பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் தனுஷின் ரசிகர்கள் நாளை கர்ணன் திரைப்படம் வெளியாகுமா என்ற அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு திட்டமிட்டடபடி நாளை கர்ணன் திரைப்படம் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

சென்னையில் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் மீண்டும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 3,986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1459 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

50% இருக்கைகள்
இதையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசுபுதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . இதன்படி ஏப்ரல் 10-ம் தேதி முதல் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டும்அனுமதியளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள தியேட்டர்கள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவிகித இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

திரையரங்குகள் செயல்பட்டன
கடந்த ஜனவரி மாதம் முதல் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட்டு வந்தன. நாளை தனுஷின் கர்ணன் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நாளை மறுநாளிலிருந்து 50% இருக்கைகள் உடன் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திட்டமிட்டபடி ரிலீஸ்
இந்நிலையில் இதுகுறித்து நம்மிடம் பேசிய கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கர்ணன் திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியிடப்படும் என்றார்.மேலும் பேசிய அவர், தமிழக அரசின் இந்தஉத்தரவால் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்றார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.