ஏன் இவ்ளோ லேட் ஆகுது.. தியேட்டர் எல்லாம் மூடி இருக்கு.. கர்ணன் ஒடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: நடிகர் தனுஷின் கர்ணன் ஒடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

Recommended Video

OTT release Movies? Netrikann, Cobra, Jagame Thanthiram lined Up | Amazon, Hotstar

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால் மற்றும் நட்டி நடராஜ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் திடீரென மூடப்பட்ட நிலையில், கர்ணன் படத்தின் வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

அசுரன் படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பட்டாஸ் படம் சிறப்பாக அமையவில்லை. ஜகமே தந்திரம் படத்தின் ரிலீசும் தாமதமானதால், அடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கர்ணனுக்கு வில்லனான கொரோனா

கர்ணனுக்கு வில்லனான கொரோனா

கர்ணன் படத்தில் வில்லன் கண்ணபிரானை கொன்று ஜெயித்தாலும், கர்ணன் படத்திற்கு மிகப்பெரிய வில்லனாக கொரோனா வைரஸ் மாறியது. ஏப்ரல் 9ம் தேதி கர்ணன் படம் வெளியான நிலையில், ஏப்ரல் 10ம் தேதி முதல் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டன. மேலும், கொரோனா பரவல் தீவிரமான நிலையில், அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

தாமதமாகும் ஒடிடி ரிலீஸ்

தாமதமாகும் ஒடிடி ரிலீஸ்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 16 நாட்களிலேயே அமேசான் பிரைமில் வெளியானது. ஆனால், கர்ணன் படம் வெளியாகி ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில், இன்னமும் ஒடிடி தளத்தில் வெளியாகவில்லை. மேலும், தியேட்டர்களும் மூடப்பட்டுள்ள நிலையில், ஒடிடியில் வெளியாவதில் என்ன சிக்கல் என்றே தெரியவில்லை.

ஒடிடி ரிலீஸ் தேதி

ஒடிடி ரிலீஸ் தேதி

ஜகமே தந்திரம் படம் ஜூன் மாதம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில், அமேசான் பிரைமில் கர்ணன் திரைப்படம் வரும் மே 14ம் தேதி வெளியாகும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக மே 9ம் தேதி அமேசான் பிரைமில் கர்ணன் ஸ்ட்ரீமிங் ஆகும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மே 14ம் தேதி கர்ணன் அமேசானில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொண்டாட்டத்தில் ஒடிடி தளங்கள்

கொண்டாட்டத்தில் ஒடிடி தளங்கள்

கடந்த ஆண்டை போலவே கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டு இருப்பதால், ஒடிடி தளங்கள் செம குஷியில் உள்ளன. அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய இரு பெரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல பெரிய படங்களை நல்ல தொகைக்கு வாங்கி வெளியிட போட்டியிட்டு வருகின்றன. முன்னணி நடிகர்களும் வேறு வழியின்றி ஒடிடி ரிலீசுக்கு தயராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X