“வாள் தூக்கி நின்னான் பாரு”.. சம்மரில் தனுஷின் சம்பவம் லோடிங்.. கதிகலங்க வைக்கும் கர்ணன் டீசர்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வாள் ஒன்றை கையில் ஏந்திக் கொண்டு மலை உச்சியின் மேல் லுங்கியோடு ஏறி நிற்கும் அட்டகாசமான காட்சி டீசரில் இடம்பெற்றுள்ளது.

வாள் தூக்கி நின்னான் பாரு
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், கெளரி கிஷன் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. "வாள் தூக்கி நின்னான் பாரு, வந்து சண்டபோட்ட எவனும் இல்ல" என்கிற கேப்ஷனோடு இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த டீசரை வெளியிட்டுள்ளார்.

நீதி சூரியனை போல
நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது என்கிற வைர வரிகளுடன் கர்ணன் டீசர் ஆரம்பமாகிறது. குதிரை, யானை, நாய் உள்ளிட்ட உயிரனங்களை காட்டியபடியே.. நடிகர் தனுஷ் கையில் வீர வாளுடன் மலையின் உச்சி மீது ஓடி ஏறி நிற்கும் காட்சியையே தற்போது டீசராக படக்குழு வெளியிட்டுள்ளது.

புல்லரிக்கும் இடம்
கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் என அந்த ஒரு இடத்தை மீண்டும் மீண்டும் இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு செய்வதிலேயே, அந்த இடம் ரொம்பவே முக்கியமான காட்சி என்பது தெளிவாகிறது. நிச்சயம் கர்ணன் படத்தில் அந்த காட்சி இடம்பெறும் இடத்தில் அனைத்து ரசிகர்களுக்கும் புல்லரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்மர் சம்பவம்
கர்ணன் படத்தின் டீசர் உடன் கர்ணன் படம் வரும் ஏப்ரல் 2021ல் வெளியாகும் என்கிற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் சம்மருக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் தனுஷிடம் இருந்து தரமான சம்பவம் வரும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அடுத்த அசுரன்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ரொம்பவே கவர்ந்தது. அந்த அளவுக்கு இன்னொரு தரமான படமாக தனுஷின் கர்ணன் இருக்கும் என்றும், அடுத்த அசுரன் இந்த கர்ணன் என்றும் கூறி வருகின்றனர்.

அஜித்துடன் மோதல்
ஏப்ரல் மாதம் தல அஜித் நடித்த வலிமை திரைப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வலிமை படத்துடன் தனுஷின் கர்ணன் படம் பயங்கர மோதலை சந்திக்கும் என்றும் கோலிவுட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். வலிமை படம் அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஜகமே தந்திரம் எப்போ
கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் என அறிவித்துள்ள நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் எப்போது? எதில் வெளியாகும் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். நெட்பிளிக்ஸில் பிப்ரவரி மாத இறுதியில் ஜகமே தந்திரம் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











