தனுஷை வைத்து மாரி செல்வராஜ் தரமான சம்பவம் செய்தாரா? இல்லையா.. கர்ணன் ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் மாஸ் ஆக்‌ஷன் படமாக கர்ணன் வெளியாகி உள்ளது.

Recommended Video

KARNAN FDFS | Mari Selvaraj, Dhanush, Fans Celebration, Karnan Public Review

அடிதட்டு மக்களின் எழுச்சியாக கர்ணன் உள்ளதாக படத்தை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பில் வெளியாகி உள்ள கர்ணன் படம் தரமான சம்பவமாக உள்ளதா இல்லையா என ட்விட்டர் வாசிகள் என்ன சொல்லி உள்ளனர் என்பதை இங்கே காண்போம்.

5 ஸ்டார்

5 ஸ்டார்

சாதிய பிரிவினைகளை விரிவாக விவரிக்கும் படமாக கர்ணன் உள்ளது. படத்தின் கிளைமேக்ஸை பார்த்து விட்டு ரசிகர்கள் பேச்சே வராமல் ஸ்தம்பித்து போகும் அளவுக்கு கர்ணன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு 5 ஸ்டார்களையும் அப்படியே அள்ளி கொடுக்கலாம் என இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

ஏகப்பட்ட குறியீடுகள்

ஏகப்பட்ட குறியீடுகள்

கர்ணன் படத்தின் முதல் பாதி வேற லெவலில் உள்ளது. ஏகப்பட்ட உருவகங்களும், குறியீடுகளையும் வைத்து இயக்குநர் மாரி செல்வராஜ் பிரிலியன்ட்டாக இந்த படத்தை இயக்கி உள்ளார். கிராமத்து நபராகவே மாறி தனுஷ் வாழ்ந்துள்ளதும், சாதாரண மனிதனின் எழுச்சியும் கூஸ் பம்ப்ஸ் கொடுக்கிறது என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

தனுஷ் ரசிகர்களாக மாறிடுவர்

தனுஷ் ரசிகர்களாக மாறிடுவர்

கர்ணன் படத்தை பார்த்த பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் தனுஷ் ரசிகர்களாக மாறிடுவர் என விமர்சகர் அபிஷேக் ராஜா தனது ட்வீட் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மேலும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் விதமாக படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் செதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்திய சினிமாவின் பெருமை

இந்திய சினிமாவின் பெருமை

கர்ணன் படத்தை பார்த்து விட்டேன். மாரி செல்வராஜ், தனுஷ் மற்றும் சந்தோஷ் நாராயணன் இந்திய சினிமாவின் மணி மகுடமாக திகழ்கின்றனர். பரியேறும் பெருமாள் படத்தில் மாரி செல்வராஜ் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். கர்ணன் படத்தில் தனது போராட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

கட்டவிழ்க்கப்பட்ட கர்ணன்

கட்டவிழ்க்கப்பட்ட கர்ணன்

தமிழ் சினிமாவிலேயே சிறந்த இடைவேளை காட்சி கர்ணன் திரைப்படத்தில் அமைந்துள்ளது. கட்டவிழிக்கப்பட்ட கர்ணன் வெறி, மாரி செல்வராஜ் கலக்கிட்டாரு, அசுரன் இடைவேளையும் கர்ணன் இடைவேளையும் சரி சமமாக தெறிக்க விடுகிறது என கர்ணன் இடைவேளை காட்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X