‘ஹே என் கோலி சோடாவே’.. ரவுடி பேபி மூடில் தனுஷ்.. எக்கச்சக்கமாக எகிறும் லைக்ஸ்.. காரணம் இது தான்!

சென்னை: நடிகர் தனுஷ் விரைவில் சென்னை திரும்ப உள்ள நிலையில், ரெஸ்டாரன்ட் ஒன்றில் கோலி சோடாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

Recommended Video

Americaவில் இருந்து ரசிகர்களிடம் பேசிய Dhanush | Jagame Thandhiram, Karthick Subbaraj

தனுஷின் ஜகமே தந்திரம் வரும் ஜூன் 18ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

தி கிரேமேன் திரைப்படத்திற்காக ஹாலிவுட்டில் படப்பிடிப்பில் உள்ள நடிகர் தனுஷ் விரைவில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுருளியின் ஆட்டம்

சுருளியின் ஆட்டம்

சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா என வசனம் பேசிய ஜகமே தந்திரம் டிரைலர் 11 மில்லியன்களை கடந்து சக்கைப் போடு போடுகிறது. வரும் ஜூன் 18ம் தேதி நெட்பிளிக்ஸில் ஜகமே தந்திரம் படம் வெளியாக உள்ள நிலையில், சுருளியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் வெயிட்டிங்.

ஹாலிவுட்டில் தனுஷ்

ஹாலிவுட்டில் தனுஷ்

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அகில உலக சூப்பர்ஸ்டாராக கலக்கி வருகிறார் நடிகர் தனுஷ். அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ருசோ சகோதரர்கள் இயக்கத்தில் கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ் நடிப்பில் உருவாகி வரும் தி கிரே மேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

சென்னை ரிட்டர்ன்ஸ்

சென்னை ரிட்டர்ன்ஸ்

தி கிரேமேன் படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் விரைவில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை திரும்பும் தனுஷ் டி43 படத்தின் அடுத்த ஷெட்யூலில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தனுஷ் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

என் கோலி சோடாவே

என் கோலி சோடாவே

நடிகர் தனுஷ் ரெஸ்டாரன்ட் ஒன்றில் அமர்ந்திருக்க அவர் அருகே கோலி சோடா இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக "ஹே என் கோலி சோடாவே" என்றும் பதிவிட்டுள்ளார். அந்த பாடல் உருவாக இது தான் இன்ஸ்பிரேஷன் என்றும் தனுஷ் பதிவிட்டுள்ளார்.

பல லட்சம் லைக்ஸ்

பல லட்சம் லைக்ஸ்

தனுஷ் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் அந்த போட்டோவிற்கு குவிந்து உள்ளது. தான்யா பாலகிருஷ்ணன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்களும், நடிகர் தனுஷின் ரசிகர்களும் கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.

டி43 அப்டேட்

டி43 அப்டேட்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடித்து வரும் டி43 படத்தில் இடம்பெற்றுள்ள மாஸ்டர் மகேந்திரன் வெயிட்டிங் அண்ணா என கேப்ஷன் போட்டு தனுஷ் வந்தவுடன் டி43 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்கிற ஹாட் அப்டேட்டையும் கமெண்ட் மூலம் கொடுத்துள்ளார். மேலும், கோலிவுட் பரம்பரையில் ஒரு ஹாலிவுட் ஹீரோ என்றும் ரசிகர்கள் தனுஷை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X