நம்ம அடிமுறை அங்க சரிபடுமா? தனுஷின் 'லோக்கல் பாய்'க்கு தேதி குறிச்ச்சாச்சு!

By

Recommended Video

மீண்டும் வருகிறார் கவுண்டமணி.. அதுவும் என்ன படம் தெரியுமா? பி.கே., வின் டாப் 5 பீட்! - வீடியோ

சென்னை: தனுஷ் நடித்துள்ள லோக்கல் பாய், ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது.

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் ஹிட்டுக்குப் பிறகு தனுஷ் நடித்த படம், பட்டாஸ். இதை துரை. செந்தில்குமார் இயக்கி இருந்தார்.

இவர், தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களையும் தனுஷ் நடித்த கொடி படத்தையும் இயக்கியவர்.

ஜனவரி 15 ஆம் தேதி

ஜனவரி 15 ஆம் தேதி

'பட்டாஸ்' படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தனுஷூடன் சினேகா, மெஹ்ரின், நாசர், முனிஷ்காந்த், நவீன் சந்திரா, சதீஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். விவேக்- மெர்வின் இசை அமைத்திருந்தனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். பொங்கலை முன்னிட்டு ரஜினியின் தர்பார் படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆனதால், இந்தப் படம் ஜனவரி 15 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

வரவேற்பை பெறவில்லை

வரவேற்பை பெறவில்லை

படம் பற்றி தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் கூறும்போது, கடந்த வருட ஜனவரியில் நாங்கள் தயாரித்த, விஸ்வாசம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த ஜனவரியில் பட்டாஸ் வெளிவருகிறது. இந்தப் படமும் வெற்றி பெறும் நம்புகிறோம் என்று கூறியிருந்தார். சென்சாரில் யு சான்றிதழ் பெற்றிருந்த இந்தப் படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை.

தெலுங்கில் டப்

தெலுங்கில் டப்

இதையடுத்து இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. அதே நாளில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பெரிய படங்கள் ரிலீஸ் ஆனதால் இந்தப் படத்தை அங்கு ரிலீஸ் செய்யவில்லை. இதற்கு அங்கு 'லோக்கல் பாய்' என்று டைட்டில் வைத்துள்ளனர். விக்னேஷ்வரா என்டர்பிரைசஸ் சார்பில் சதீஷ்குமார் படத்தை வெளியிடுகிறார்.

தற்காப்புக்கலை

தற்காப்புக்கலை

தமிழக பாரம்பரிய தற்காப்புக்கலை விளையாட்டுகளில் ஒன்றான அடிமுறையை பற்றியது இந்தப் படம். இதில் நடித்துள்ள தனுஷ், சினேகா, மெஹ்ரின் ஆகியோர் ஏற்கனவே தெலுங்கு சினிமாவிலும் அறிமுகம் என்பதால் இந்தப் படம் அங்கு வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது. வரும் 28 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X