மாறனாக மாஸ் காட்டும் தனுஷ்.. கிராப் கவுனில் கிக்கேற்றும் மாளவிகா மோகனன்.. வெளியானது நியூ ஸ்டில்ஸ்!

சென்னை: நடிகர் தனுஷின் மாறன் படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சத்யஜோதி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் மாறன் திரைப்படம் உருவாகி வருகிறது.

ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம் படங்களை தொடர்ந்து மாறன் திரைப்படமும் ஒடிடியில் வெளியாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாஸ் காட்டும் மாறன்

மாஸ் காட்டும் மாறன்

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில் மாறன் திரைப்படம் உருவாகி வருகிறது. மாறன் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலக்கல் தனுஷ்

கலக்கல் தனுஷ்

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என கலக்கி வரும் நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அட்டகாசமாக உருவாகி வரும் மாறன் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். தற்போது மாறன் படத்தில் இடம்பெற்றுள்ள எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

மாஸ்டர் டு மாறன்

மாஸ்டர் டு மாறன்

மாஸ்டர் ஹீரோயின் என தளபதி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த நடிகை மாளவிகா மோனன் இனி மாறன் ஹீரோயின் என தனுஷ் ரசிகர்களால் அழைக்கப்படுவார். கவர்ச்சி கவுன் அணிந்து மாளவிகா மோகனன் கொடுத்துள்ள அட்டகாசமான புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

கார்த்திக் நரேன்

கார்த்திக் நரேன்

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான மாஃபியா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், தனுஷின் மாறன் திரைப்படத்தை மிகவும் நம்பி தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி உள்ளார் கார்த்திக் நரேன்.

புராஜெக்ட் அக்னிக்கு பாராட்டு

புராஜெக்ட் அக்னிக்கு பாராட்டு

இந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியான நவரசா ஆந்தாலஜியின் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய புராஜெக்ட் அக்னி குறும்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அரவிந்த் சாமி மற்றும் பிரசன்னா நடிப்பில் வெளியான அந்த குறும்படத்தை தனி படமாகவே எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவும் ஒடிடியா?

இதுவும் ஒடிடியா?

தனுஷின் கர்ணன் திரைப்படம் தியேட்டரில் வெளியானாலும் மிக குறைவான நாட்களே திரையரங்குகளில் ஓடின. கொரோனா பரவல் காரணமாக அமேசான் பிரைமில் அசுரன் திரைப்படம் வெளியானது. மேலும், இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திலும், பாலிவுட் படமான கலாட்டா கல்யாணம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் வெளியானது. இந்நிலையில், மாறன் திரைப்படமும் ஒடிடி வெளியீடாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. வரும் ஜனவரி 25ம் தேதி மாறன் திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X