விடிந்தும் இருளாய் வானம்... மனதை என்னவோ செய்யுதே மாறன் படத்தோட 3வது பாடல்!

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். இந்தப் படம் வரும் 11ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது சிட்டுக்குருவி என்ற 3வது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

மாறன் படம்

மாறன் படம்

நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். இந்தப் படத்தை அருண் விஜய்யின் மாபியா படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இவர் மணிரத்னத்தின் நவரசா என் ஆந்தாலஜி தொடரில் அக்னி என்ற குறும்படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இந்நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்தப்படம் வரும் 11ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

3வது பாடல் வெளியானது

3வது பாடல் வெளியானது

படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ். முன்னதாக படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது. இதில் அண்ணன் -தங்கை பாசத்தை கூறும் வகையில் இரண்டாவது பாடல் அமைந்தது. இதனிடையே தற்போது படத்தின் மூன்றாவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தனுஷ் எழுதி பாடியுள்ள பாடல்

தனுஷ் எழுதி பாடியுள்ள பாடல்

சிட்டுக்குருவி என்ற இந்தப் பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். பாடல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு சோக நிகழ்வையடுத்து இந்தப் பாடல் படத்தில் இடம்பெற்றுள்ளது. லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ள இந்தப் பாடல் கேட்கும்போதே மனதை என்னவோ செய்கிறது. இந்தப் படத்தில் பத்திரிகையாளராக தனுஷ் நடித்துள்ளார்.

தனுஷ் அதிருப்தி

தனுஷ் அதிருப்தி

படத்தின் டீசர் உள்ளிட்டவை சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இதில் வசனங்களும் கவனிக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் இந்தப் படம் ஓடிடியில் ரிலீசாவது குறித்து தனுஷ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். படத்தின் ப்ரமோஷன் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அவர் அதில் பங்கேற்காமல் உள்ளார்.

அடுத்தடுத்த ஓடிடி ரிலீஸ்

அடுத்தடுத்த ஓடிடி ரிலீஸ்

முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த ஜகமே தந்திரம் படமும் ஓடிடியில் நேரடியாக வெளியானது. அந்த சமயத்திலும் தனுஷ் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இதே நிகழ்வு அவரது படத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஓடிடியில் ரிலீசாவது ரசிகர்களையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X