Don't Miss!
- Finance
70 நாடுகளில் முதலீடு செய்த சீனா.. அடுத்தது யாரெல்லாம் திவாலாக போகிறார்கள்..!
- Technology
ரூ.9,000 கூட இல்ல.. அதை விட கம்மி விலைக்கு Jio-வின் புதிய 5G போன்!
- News
செவ்வாய் பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பணமழைதான்!..என்ஜாய்!!
- Sports
அவருக்கு இந்திய அணியில் வேலை இல்ல.. எங்க கூட கமெண்டரி பண்ண சொல்லுங்க.. DK வை சீண்டிய முன்னாள் வீரர்
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
மாறன்... தாரா... காதலர் தினத்தை அழகாக்கிய மாறன் ரொமான்ஸ் போஸ்டர்!
சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன்.
இந்தப் படம் விரைவில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.
தற்போது காதலர் தினத்தையொட்டி படத்தின் அழகான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்திய செல்வராகவன் ட்வீட்... போஸ்டரும் வெளியிட்டிருக்காரு!

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த ஜகமே தந்திரம் ஓடிடியில் நேரடியாக வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் வெளியான அட்ராங்கி ரே படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

அட்ராங்கி ரே படம்
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான அட்ராங்கி ரே படத்தில் அவருடன் இரண்டாவது முறையாக தனுஷ் இணைந்த படம். இந்தக் கூட்டணி தற்போது மூன்றாவது படத்திலும் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.

அடுத்தடுத்த படங்கள்
திருச்சிற்றம்பலம், மாறன் என தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இதில் மாறன் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளது. விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தமிழில் இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசை
படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

காதலர் தின ஸ்பெஷல் போஸ்டர்
இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி இந்தப் படத்தின் அழகான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்தில் தனுஷ் மற்றும் மாளவிகாவின் கேரக்டர் பெயர்களையும் வெளியிட்டுள்ளது. மாறன் மற்றும் தாரா என்ற கதாபாத்திரங்களில் இருவரும் நடித்துள்ளனர்.

தனுஷ் -மாளவிகா கெமிஸ்ட்ரி
இந்தப் போஸ்டரில் தனுஷ் மற்றும் மாளவிகாவின் கெமிஸ்ட்ரி மிகவும் அழகாக காணப்படுகிறது. காதலர் தினத்தை அழகாக்கும் அழகான மெழுகுவர்த்திகள் எரிய, இவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்வது போல இந்த போஸ்டர் அமைந்துள்ளது.