அண்ணன் -தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் மாறன் பாடல்... வெளியானது 2வது சிங்கிள்
சென்னை : நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மாறன்.
படத்தின் சூட்டிங் உள்ளிட்டவை நிறைவடைந்து படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே படத்தின் பிரமோஷனை படக்குழு முடுக்கிவிட்டுள்ளது.

மாறன் படம்
நடிகர் தனுஷ்,மாளவிகாக மோகனன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மாறன். படத்தில் சமுத்திரகனி, அமீர், ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசை
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பையும் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளன. காதலர் தினத்தையொட்டி படத்தின் போஸ்டர் ஒன்றும் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

இரண்டாவது பாடல் வெளியீடு
இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிளை படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு இந்தப் பாடல் உருவாகியுள்ளது. அண்ணனா தாலாட்டும் என்று துவங்கும் அந்தப் பாடலை பாடியுள்ளார் அனுராக் குல்கர்னி. பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.

தங்கையாக ஸ்மிருதி வெங்கட்
படத்தில் ஸ்மிருதி வெங்கட் தனுஷிற்கு தங்கையாக நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள் அதிரடியாக வெளியாகியுள்ள நிலையில், மாளவிகாவுடன் உள்ள போஸ்டரை தவிர்த்து மற்ற போஸ்டர்களில் தனுஷ் மிகவும் ஆக்ரோஷமாக காணப்படுகிறார். தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

அடுத்தடுத்த படங்கள்
இதனிடையே நானே வருவேன், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் வாத்தி மற்றும் சார் படங்களில் தனுஷ் தற்போது மும்முரமாக நடித்து வருகிறார். விரைவில் அந்தப் படங்களும் ரிலீசுக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனுஷின் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படமும் ஜூலையில் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











