அடுத்தடுத்த கலக்கல் வெளியீடுகள்... ரசிகர்களை குஷியாக்க தயாரான மாறன் டீம்
சென்னை : நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள படம் மாறன்.
இந்தப் படம் விரைவில் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.
இதனிடையே பிரமோஷனில் மாறன் படக்குழுவினர் சிறப்பான வகையில் ஈடுபட்டுள்ளனர்.

மாறன் படம்
நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் லீட் கதாபாத்திரங்களில் நடித்து விரைவில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் படம் வெளியாக உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ். படத்தின் பாடல்கள் குறிப்பாக அண்ணன் -தங்கை பாசத்தை சொல்லும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ரிலீசுக்கு தயார்
படத்தில் தனுஷிற்கு தங்கையாக நடித்துள்ளார் ஸ்மிருதி வெங்கட். மேலும் சமுத்திரகனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கம்
துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் என்பதால் மாறன் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் மாளவிகா மோகனன் தனுஷிற்கு ஜோடியாகியுள்ளார். பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து இவர் மூன்றாவது தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

ட்விட்டரில் தனுஷ் எமோஜி
படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. தனுஷின் மாறன் படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்ந்துள்ளது. இந்தப் படத்திற்கு ட்விட்டரில் பிரத்யேக எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ் படத்திற்கு இவ்வாறு எமோஜி வெளியிடப்படுவது இது இரண்டாவது முறை. முன்னதாக ஜகமே தந்திரம் படத்திற்கும் இதுபோல எமோஜி வெளியிடப்பட்டது.

இன்று ட்ரெயிலர் ரிலீஸ்
இந்த எமோஜி மே மாதம் 26ம் தேதி வரையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலரும் ரிலீசாக உள்ளது. இதையொட்டி மாறன் ட்ரெயிலரை ட்விட்டரில் அவரது ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கியுள்ளனர். படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ட்ரெயிலர் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











