சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா.. ப்பா.. இன்னா வெரைட்டி காட்டுறாரு.. ஜகமே தந்திரம் டிரைலர் மாஸ்!
Dhanush’s most expecting gangster movie Jagame Thandhiram trailer is here. It will streaming on Netflix from June 18th.
சென்னை: ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்க இப்படியொரு டிரைலர் போதும்.. ஜூன் 18 நாளைக்கே வராதா என தனுஷ் ரசிகர்கள் இப்பவே நினைக்க ஆரம்பித்து இருப்பார்கள்.
Recommended Video
அந்த அளவுக்கு சரவெடியாக உள்ளது ஜகமே தந்திரம் டிரைலர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜேம்ஸ் காஸ்மோ நடித்துள்ள ஜகமே தந்திரம் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ரவுண்டு கட்டி ரகிட ரகிட
ஜகமே தந்திரம் படமா? கேஜிஎஃப் 2வா என குழம்ப வைக்கும் அளவுக்கு துப்பாக்கி சந்தங்கள் நிறைந்த அதிரடி டிரைலராக ஜகமே தந்திரம் டிரைலர் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் ஹீரோ தனுஷ் ரவுண்டு கட்டி ரகிட ரகிட போட்டு வருகிறார்.

பக்கா கேங்ஸ்டர் படம்
ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட கேங்ஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து பக்காவான ஒரு கேங்ஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வரும் ஜூன் 18ம் தேதி ஜகமே தந்திரம் வெளியாகிறது.

டிரைலர் எப்படி இருக்கு
ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மிரட்டலில் நடிகர் தனுஷினி வெரைட்டியான நடிப்பில் நாயகியின் ஒரு சில சிலிர்ப்புகளில் துப்பாக்கி வேட்டுச் சத்தத்தில் வேற லெவலில் தெறிக்கிறது ஜகமே தந்திரம் டிரைலர். இன்னும் 17 நாட்களை தனுஷ் ரசிகர்கள் எப்படித் தான் பொறுப்பார்கள் என்றே தெரியவில்லை.
லண்டன் தாதா
மதுரை சுருளி டு லண்டன் தாதாவாக தனுஷ் இந்த படத்தில் மெர்சல் காட்ட உள்ளார். தப்பு பண்றேன்.. பெரிய தப்பு.. சின்ன தப்புன்னுலாம் இல்லை என சொல்லும் வசனம் அந்நியன் பட வசனத்தை நினைவூட்டுகிறது. மேலும், கடைசியாக சோழர் பரம்பரையில் ஒரு அமெரிக்க தாதா எனும் வசனம் ஆயிரத்தில் ஒருவன் 2வின் எக்ஸ்பெக்டேஷனை அதிகரிக்கிறது.

தனுஷ் ட்வீட்
ஜகமே தந்திரம் படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என்கிற விருப்பத்தை தயாரிப்பாளர்களிடம் முன் வைத்த நடிகர் தனுஷின் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், ஜகமே தந்திரம் தொடர்பான எந்தவொரு புரமோஷனையும் நடிகர் தனுஷ் அதிகளவில் மேற்கொள்ளவில்லை. இந்த டிரைலரையும் சந்தோஷ் நாராயணன் தான் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், தற்போது தியேட்டரில் படம் வெளியாகி இருந்தால் நல்லா இருந்திருக்கும் என்கிற ரீதியில் தனுஷ் ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











