twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Naane Varuven Box Office Prediction: தனுஷின் நானே வருவேன்.. முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்?

    |

    சென்னை: தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் திரைப்படம் நாளை (செப்டம்பர் 29) வெளியாகிறது.

    இந்த படத்தில் தனுஷ், செல்வராகவன், இந்துஜா, எல்லி அவ்ரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    முதல் நாளில் அந்த படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறித்த கணிப்பை இங்கே காண்போம்..

     செல்வராகவன் நினைத்தது புதுப்பேட்டை 2. எடுத்தது நானே வருவேன்... தனுஷ் பங்களிப்பு தெரியுமா? செல்வராகவன் நினைத்தது புதுப்பேட்டை 2. எடுத்தது நானே வருவேன்... தனுஷ் பங்களிப்பு தெரியுமா?

    அண்ணன் உடன் இணைந்து

    அண்ணன் உடன் இணைந்து

    அண்ணன் செல்வராகவன் கதை எழுதி அப்பா கஸ்தூரி ராஜா இயக்க துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ், அதன் பின்னர் அண்ணன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். புதுப்பேட்டை படத்தில் அதுவரை தமிழ் சினிமா பார்க்காத கேங்ஸ்டர் கொக்கி குமாராக தனுஷை காட்டி இருந்தார் செல்வராகவன். மயக்கம் என்ன படத்திற்கு பிறகு 5வது முறையாக தனுஷ் - செல்வராகவன் இணைந்து பணியாற்றி உள்ள படம் தான் இந்த நானே வருவேன்.

    முதல் முறையாக

    முதல் முறையாக

    பீஸ்ட், சாணிக் காயிதம் படங்களின் மூலம் நடிகராக மாறியுள்ள செல்வராகவன் முதல் முறை தனது தம்பி தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ளார். திரையில் இருவரும் இணைந்து எப்படி வெறித்தனம் காட்டி நடிக்கப் போகின்றனர் என்பதை காணவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    700 ஸ்க்ரீன்கள்

    700 ஸ்க்ரீன்கள்

    வியாழக்கிழமை வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு சுமார் 700 ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆனதும் ஸ்க்ரீன் எண்ணிக்கை 250 ஆக குறைந்து விடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், முதல் நாளிலேயே வசூலை அல்ல வேண்டிய கட்டாயத்தில் நானே வருவேன் படம் உள்ளது.

    20 கோடி வந்துடுச்சு

    20 கோடி வந்துடுச்சு

    திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றி காரணமாக ரிலீசுக்கு முன்பே படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் சுமார் 20 கோடி வரை பெரிய நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தியேட்டரில் சுமாரான வசூல் வந்தால் கூட தயாரிப்பாளர் தாணுவுக்கு எந்தவொரு நஷ்டமும் இல்லை என்றே கூறுகின்றனர்.

    முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்

    முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்

    தமிழ்நாட்டில் மட்டுமே முதல் நாளில் 700 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாளே வெந்து தணிந்தது காடு படத்தை போல டபுள் டிஜிட்டில் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சிற்றம்பலம் 9 கோடி வசூல் செய்த நிலையில், நானே வருவேன் 10 கோடியை தொடும் என்றும் கூறுகின்றனர். ஆனால், 4 மணி காட்சி இல்லாத நிலையில், 7 முதல் 8 கோடி தான் வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அந்த பிரச்சனை

    அந்த பிரச்சனை

    ஆனால், செல்வராகவன் படத்துக்கு திருச்சிற்றம்பலம் படத்துக்கு வந்ததை போல குடும்ப ரசிகர்கள் வருவார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், நானே வருவேன் திரைப்படம் யு/ஏ சான்றிதழ் படம் தான். மேலும், குடும்ப ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க அப்பா மகள் பாச பாடலையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல் நாளில் பெரிய வசூலை படம் வசூல் செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    பலத்த அடி

    பலத்த அடி

    ஆனால், அடுத்த நாளே படத்தின் காட்சிகள் பெரியளவில் குறையத் தொடங்கியதும் நானே வருவேன் படத்துக்கு வசூலில் மிகப்பெரிய அடி விழும் என்பது கன்ஃபார்ம் என்கின்றனர். இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தால் கூட பொன்னியின் செல்வன் ரிசல்ட்டை பொறுத்து தான் இதன் பாக்ஸ் ஆபிஸ் அமையும் என்கின்றனர்.

    English summary
    Dhanush's Naane Varuven First Day Box Office Prediction is here. Selvaraghavan's psycho thriller movie expected to do well in first day at box office, but it will see a huge drop on weekends over Ponniyin Selvan 1 release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X