Naane Varuven Box Office: திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூலை கூட நெருங்காத நானே வருவேன்!
சென்னை: முதல் நாளில் 700 தியேட்டர்களில் வெளியானாலும் பெரிய புரமோஷன் ஏதும் பண்ணாத நிலையில், தனுஷின் நானே வருவேன் படத்துக்கு பெரியளவில் கூட்டம் இல்லை.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா, எல்லி ஆவ்ராம் நடிப்பில் ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகிய நானே வருவேன் செப்டம்பர் 29ம் தேதி வெளியானது.
படத்தின் முதல் பாதி சூப்பராக உள்ளது என்றும் இரண்டாம் பாதி சுமார் என்றும் விமர்சனங்கள் குவிந்தன.

புரமோஷனே இல்லை
திருச்சிற்றம்பலம் படத்துக்கு பண்ணது போல ஆடியோ லாஞ்ச், டிரைலர் வெளியீடு என எந்தவொரு புரமோஷனையும் கலைப்புலி எஸ். தாணு செய்யவில்லை. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் வியாழக்கிழமை வெளியான நிலையில், வேலை நாள் என்பதால் தனுஷ் ரசிகர்களை தவிர பொதுமக்கள் கூட்டம் பெரிதாக இல்லை.

கலவையான விமர்சனம்
மேலும், ஹாரர் படமாக உருவாகி உள்ள நானே வருவேன் படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் பாதி ஹாலிவுட் தரத்தில் மிரட்டியதாகவும் இரண்டாம் பாதியை செல்வராகவன் சொதப்பி விட்டார் என்றும் அதிலும் அந்த கிளைமேக்ஸில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை என விமர்சித்து தள்ளி விட்டனர்.

முதல் நாள் வசூல் எவ்வளவு
இந்நிலையில், தனுஷின் நானே வருவேன் படத்தின் முதல் நாள் வசூல் 6 முதல் 7.30 கோடி வரை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிம்புவின் வெந்து தணிந்ததுகாடு படம் முதல் நாளே டபுள் டிஜிட்டை தாண்டியதாக கூறப்பட்ட நிலையில், நானே வருவேன் படம் அதனை முதல் நாளில் வீழ்த்தவில்லை என்கின்றனர்.

திருச்சிற்றம்பலத்தை விட கம்மி
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் முதல் நாளில் 9 கோடி வரை வசூல் செய்து மாபெரும் ஹிட் அடித்தது. மேலும், 100 கோடியை கடந்து தனுஷுக்கு தியேட்டரில் மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது. ஆனால், பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நானே வருவேன் அதனை பூர்த்தி செய்யவில்லை என தனுஷ் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











